அரசியல் காழ்ப்புணர்ச்சி வேண்டாமே.. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை மாற்றக்கூடாது.. ஓபிஎஸ் வலியுறுத்தல்
சென்னை: 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை புதிய இடத்திற்கு மாற்றுவது குறித்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், முதல்வர் இதில் தலையீட்டு இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்
தமிழ்நாட்டில் புனித ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச் செயலகம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. அங்கு இடநெருக்கடி இருப்பதாகக் கூறி, கடந்த திமுக ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.
ஆனால் அதன் பிறகு, 2011இல் ஆட்சியைப் பிடித்த ஜெயலலிதா தலைமைச் செயலக கட்டடத்தை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றியமைத்தார்.

ஒபிஎஸ் கடிதம்
இந்நிலையில், தற்போது ஸ்டாலின் தலைமையில் திமுக மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், மக்களுக்குப் பெரிதும் பயன்பட்டு வரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெயலலிதா
இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், "நோய் இன்னதெனக் கண்டறிந்து, பின் அது உண்டான காரணத்தை அறிந்து, அதன் பின் அந்நோயைத் தீர்ப்பதற்கான வழிமுறையைக் கையாண்டு, நோய் நீங்க மருத்துவம் செய்ய வேண்டும் என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க, 'அனைவருக்கும் சுகாதாரம்' என்ற குறிக்கோளை அடையும் வண்ணம், ஏராளமான சுகாதாரத் திட்டங்களை, மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை தீட்டி, நடைமுறைப்படுத்தியவர் ஜெயலலிதா.

எய்ம்ஸ்க்கு நிகராக
அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களும், குறிப்பாக ஏழையெளிய மக்கள், பல்வேறு நோய்களுக்கும் தரமான உயரிய சிகிச்சையினை இலவசமாகப் பெறும் வண்ணம், புது டெல்லியில் உள்ள 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு இணையான வசதிகளுடன் பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையைச் சென்னை மாநகரத்தின் மையப் பகுதியான அண்ணா சாலையில் அமைந்துள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உருவாக்கியதோடு, அங்கு ஒரு மருத்துவக் கல்லூரியையும் ஜெயலலிதா ஏற்படுத்தினார்.

மாற்றப்பட்டது ஏன்
கடந்த 2011-ஆம் ஆண்டு அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன், ஓமந்தூராரில் அமைந்துள்ள கட்டடம், சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அனைத்துத் துறைகளும் செயல்படுவதற்கு போதுமானதாக இல்லை என்பதாலும், பயன்படுத்தக்கூடிய இடம் வெகு குறைவாக இருப்பதால், அலுவலகப் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில், இந்தக் கட்டடம் இல்லை என்பதாலும், இருவேறு கட்டடங்களில் இருந்து தலைமைச் செயலகம் செயல்பட முடியாது என்பதாலும், சட்டமன்றமும், தலைமைச் செயலகமும் புனித ஜார்ஜ் கோட்டையில் தொடர்ந்து இயங்க வழிவகை செய்துவிட்டு, அந்த இடத்தில் பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரியையும் உருவாக்கினார்கள். இது மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு.

பலரும் பயன்
இதன்மூலம், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்காள மாணவ மாணவியர் இந்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, மருத்துவம் பயின்று. இந்த நாட்டின் சிறந்த மருத்துவர்களாக ஆகி வருகின்றனர். இது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் இங்குள்ள பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுக் குணமடைந்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில், இந்த மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் அனுமதிக்கப்பட்டு, நல்ல சிகிச்சை பெற்று, குணமடைந்து வீடு திரும்பினர். இந்த மருத்துவமனை அனைவரின் ஏகோபித்த ஆதரவையும், பாராட்டினையும், வரவேற்பினையும் பெற்றுள்ளது.

கிங் ஆய்வக வளாகம்
இந்தச் சூழ்நிலையில், கிண்டியிலுள்ள கிங் ஆய்வக வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்து, அதனை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆய்வு செய்ததையடுத்து, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்பட இருப்பதாகவும், அந்தக் கட்டடம் மீண்டும் சட்டமன்றமாகவோ அல்லது சட்ட மேலவையாகவோ மாற்றி அமைக்கப்படும் என்றும் செய்திகள் வருகின்றன, இது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் அனைவருடைய மனங்களிலும் எழுந்துள்ளது.

மாற்றக்கூடாது
அதிமுகவை பொறுத்தவரையில், புதிதாக பல்நோக்கு மருத்துவமனையைக் கிண்டி, கிங் வளாகத்தில் உருவாக்குவதை நாங்கள் வரவேற்கிறோம். அதே சமயத்தில், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை அங்கிருந்து கிங் மருத்துவ வளாகத்திற்கு மாற்றுவது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை அங்கிருந்து மாற்றப்படுவது என்ற செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில், அதனை உடன் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு












Click it and Unblock the Notifications