Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்போடு, பணிவோடு , கெஞ்சுகிறேன்.. நெகிழ்ந்து பேசிய ஸ்டாலின்.. தடுப்பூசி போட வலியுறுத்தல்!

கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொண்டு மக்களை காத்தோம் என்று கூறியுள்ள முதல்வர் மு.க ஸ்டாலின்,அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா தற்போது மிரட்ட தொடங்கி இருக்கிறது என முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். ஒமிக்ரானை தடுப்பதற்கான கேடயம் முகக்கவசம் மட்டும் தான் என்று கூறிய முதல்வர் அனைவரும் முக கவசம் அணிவது அவசியம் என்றும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என்று பணிவோடும் அன்போடும் கெஞ்சிக் கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

Recommended Video

    சென்னை: தடுப்பூசி போடுங்க.. கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன்: முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்!

    15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்து பேசினார். அப்போது அவர், தீவிர நடவடிக்கைகள் எடுத்து கொரோனா 2வது அலையின் வீரியத்தை திமுக அரசு குறைத்தது என்றார்.

    சற்றே பெருமூச்சு விட்டு நிமிர்ந்த நிலையில் ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மிரட்ட தொடங்கி இருக்கிறது எனவும் தெரிவித்தார். ஒமிக்ரானை தடுப்பதற்கான கேடயம் முகக்கவசம் மட்டும் தான் என கூறினார்.
    தற்போது ஒமிக்ரான் பரவல் வேகம் அதிகரித்துள்ளது மக்கள் அனைவரும் பாதுகாப்போடு இருக்க வேண்டும்.

    ஓமிக்ரான் பரவல் வேகம்

    ஓமிக்ரான் பரவல் வேகம்

    நாம் நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கவனத்தோடு விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். டெல்டாவில் இருந்து உருமாறிய வைரஸ் ஆக ஓமிக்ரான் இருந்தாலும் அதன் பாதிப்பு குறைவுதான். அதே நேரத்தில் ஓமிக்ரான் பரவல் வேகம் அதிகமாக உள்ளது எனவே மக்கள் கவனத்தோடும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும். தமிழகத்தில் நோயின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    தனிமனித இடைவெளி

    தனிமனித இடைவெளி

    நோய் பரவலில் இருந்து நம்மைக்காக்கும் ஒரே ஆயுதம் முக கவசம் மட்டும்தான். எனவே மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    தடுப்பூசி கட்டாயம்

    தடுப்பூசி கட்டாயம்

    நம்முடைய நாட்டில் செலுத்தக்கூடிய தடுப்பூசி நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு நோய் தாக்கினாலும் அதிக பாதிப்பு ஏற்படாது எனவே மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். அமெரிக்கா, ஐரோப்பாவில் தினசரி லட்சக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர்.

    தடுப்பூசி இயக்கம்

    தடுப்பூசி இயக்கம்

    இந்தியாவிலும் நோய் தொற்று அதிகரித்து வருகிறது.கேரளா, மகாராஷ்டிராவில் நோய் பாதிப்பு கூடி வருகிறது. தமிழகத்திலும் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஒரு இயக்கமாகவே செயல்படுத்தி வருகிறோம் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

    அன்போடு கேட்கிறேன்

    அன்போடு கேட்கிறேன்

    60 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்,பரிவோடு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் வீட்டு பிள்ளையாக கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். முதல்வர் என்ற முறையில் மட்டுமல்லாது உங்கள் குடும்பத்தில் ஒருவராக கேட்டுக்கொள்வதாகவும் மு.க ஸ்டாலின் கூறினார்.

     நோய் ஒழிப்பில் முதலிடம்

    நோய் ஒழிப்பில் முதலிடம்

    அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். ஓமிக்ரானை ஒழிக்க ஒரு கையினால் தட்டினால் மட்டும் போதாது மக்களின் ஒத்துழைப்பும் தேவை. நோயை ஒழித்த மாநிலம் என்பதில் முதலிடம் பெற வேண்டும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+