OPS: திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்? சேகர்பாபுவுடன் 15 நிமிடங்கள் சந்திப்பு? அப்பாவு அறையில் என்ன நடந்தது?
சென்னை: தமிழக சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு அறையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸும் அமைச்சர் சேகர்பாபுவும் 15 நிமிடங்கள் ஆலோசனை நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அவசரமாக முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு ஓபிஎஸ் தள்ளப்பட்டுவிட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக ஆகிய கட்சிகளின் 4 முனை போட்டி நிலவுகிறது. பெரும்பாலான கட்சிகள் கூட்டணி விவகாரத்தில் முடிவெடுத்துவிட்ட நிலையில் ராமதாஸ் தலைமையிலான பாமக, தேமுதிக, ஓபிஎஸ்ஸின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் ஆகியவை இன்னும் தங்கள நிலைப்பாட்டை அறிவிக்காமல் இருக்கின்றன.
ராமதாஸ்
இவர்களில் ராமதாஸ் பாமகவும் தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணையலாம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அதிமுக கூட்டணி ஃபுல்லாக இருக்கிறது. பிரேமலதாவையும் ராமதாஸையும் தங்கள் கூட்டணிக்குள் இழுக்க நேற்று பிரதமர் வருவதற்கு கடைசி நிமிடம் வரை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அவர்கள் பிடிகொடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
ஓபிஎஸ்
இந்த நிலையில் ஓபிஎஸ்ஸை பொருத்தமட்டில் கடந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து செயல்பட்டார், அதிமுகவில் இணைய முட்டி மோதிய நிலையில் அவருக்கு எடப்பாடி பழனிசாமி இடம் கொடுக்காததால் ஓபிஎஸ் பாஜகவில் இணைவார் என சொல்லப்பட்டது.
அதிமுக தொண்டர்கள்
ஆனால் அவரோ அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு எனும் அமைப்பை தொடங்கி என்டிஏ கூட்டணியில் கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். தோல்வியடைந்தாலும் அதிக அளவு வாக்குகளை பெற்றார். எனினும் அதிமுகவில் இணைவது என்ற முடிவை அவர் கைவிடாமல் தொடர்ந்து டெல்லி தலைமையிடம் உதவி கேட்டு வந்தார்.
சேர்த்து வைத்த பிரதமர்
கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக இரண்டாக உடைந்த போது பிரதமர் மோடிதான் எடப்பாடியையும் ஓபிஎஸ்ஸையும் சேர்த்து வைத்ததால் (இதை சொன்னதே ஓபிஎஸ்தான்), இந்த முறையும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஓபிஎஸ்ஸின் போனை கூட எடுக்காமல் புறக்கணித்தார். இதனால் மிகவும் வேதனையுடன் என்டிஏ கூட்டணியில் இருந்து வந்துவிட்டார்.
அதிமுகவை கைப்பற்ற
பிறகு அதிமுகவை கைப்பற்றுவதற்கு டிடிவி தினகரன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் தனக்கு உறுதுணையாக இருப்பார்கள் என ஓபிஎஸ் கருதினார். இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு, சென்னையில் நடந்த தனது ஆதரவாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் கெடுவெல்லாம் விதித்தார். ஆனால் ஒன்றும் பலனில்லை. டிடிவி தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்றுவிட்டார். செங்கோட்டையன் தவெகவுக்கு சென்றுவிட்டார்.
பிரஸ்மீட்
சசிகலாவோ வெறும் பிரஸ்மீட்டில் மட்டுமே அதிமுகவை ஒன்றிணைத்து வருகிறார். இந்த நிலையில்தான் ஓபிஎஸ்ஸின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஏற்கெனவே தனது மகன் ரவீந்திரநாத்துடன், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
திமுக கூட்டணி
இதனால் அவர் திமுக கூட்டணியில் இணைவார் என சொல்லப்பட்டது. ஆனால் கிணற்றில் போட்ட கல்லாக தனது முடிவை வெளியே அறிவிக்காமல் இருந்தது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார்.
8 ஆண்டுகள் பயணம்
அது போல் ஓபிஎஸ்ஸின் கூடவே 8 ஆண்டுகள் பயணித்த வைத்திலிங்கமும் திமுகவில் இணைந்துவிட்டார். இவருடன் திமுகவில் இணைவதாக இருந்த குன்னம் ராமசந்திரன் திடீரென அரசியலை விட்டு விலகிவிட்டார். அது போல் ஓபிஎஸ் ஆதரவாளர்களான வெல்லமண்டி நடராஜனும் ஐயப்பனும் எப்போது அவரை விட்டு விலகுவார்கள் என கணிக்க முடியவில்லை.
அதிமுகவில் இணையும் தருமர்
ஓபிஎஸ் ஆதரவாளரும் மாநிலங்களவை எம்பியுமான தருமர் இன்று அதிமுகவில் இணைகிறார். இந்த நிலையில் கிட்டதட்ட ஓபிஎஸ் தனித்து விடப்பட்டதாகவே கருதப்படுகிறது. இதனால் அவர் தன்னுடன் இருப்போரையாவது தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
சட்டசபை கூட்டத் தொடர்
இந்த நிலையில்தான் இன்று சட்டசபை கூட்டத் தொடர் முடிந்தவுடன் அப்பாவு அறைக்கு ஓபிஎஸ் சென்றார். அங்கு சேகர்பாபு இருந்தார். இருவரும் 15 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனராம். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எல்லாம் திமுகவில் இணைந்து வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவமானதாக தெரிகிறது.
அதிமுக கூட்டணிக்கு செல்ல முடியாத நிலை
அதிமுக கூட்டணிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. பாஜகவும் ஓபிஎஸ்ஸை கைவிட்டுவிட்டது. தினகரனையாவது அமித்ஷா அழைத்து பேசி எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணிக்கு வருமாறு அழைத்தார். ஆனால் ஓபிஎஸ்ஸை பாஜகவினர் யாருமே கண்டுக் கொள்ளவில்லை. இதனால் தனது அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகாமல் இருக்கவும் ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஓபிஎஸ் இருக்கிறார்.
அதிமுகவில் அதிருப்தியில் இருப்போரிடம் திமுக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. அந்த வகையில் செங்கோட்டையனிடம் கூட சேகர்பாபு பேசியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அவர் தவெகவுக்கு சென்றுவிட்டார். இந்த சந்திப்பு தகவலையும் மறுத்துவிட்டார்.
தற்போது ஓபிஎஸ்ஸுடன் 15 நிமிடங்கள் சேகர்பாபு ஆலோசனை நடத்தி இருக்கும் நிலையில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்துவிடுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுகவுடன் கூட்டணிக்கு சென்றாலும் ஓரிரு சீட்டுகளுக்கு உழைக்கவும் ஆலோசனைகளை நடத்தவும் ஆதரவாளர்கள் தேவை. ஆனால் சொல்லிக் கொள்ளும்படியாக பிரபலங்கள் யாரும் ஓபிஎஸ்ஸுடன் இல்லாததால் அவர் திமுகவில் இணையும் முடிவை எடுப்பார் என்றே அரசியல் ஆலோசகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
-
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா?












Click it and Unblock the Notifications