இபிஎஸ் கேம்பிற்கு தாவிய ஓபிஎஸ் ஆதரவாளர் வேளச்சேரி அசோக்.. அதிமுகவில் அடுத்தடுத்த ட்விஸ்ட்!
சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் வேளச்சேரி அசோக் தனது ஆதரவையும் தெரிவித்தார்.
நாளை அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து தொண்டர்களும் நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்ய வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பி வருகிறார்கள். மேலும் இரட்டை தலைமையால் கட்சி தேய்ந்தது என்றும் வளரவே இல்லை என்றும் தொண்டர்களின் கருத்தாக உள்ளது.

ஓபிஎஸ் தர்மயுத்தம்
கடந்த 2017 ஆம் ஆண்டு ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்களின் ஆதரவு இருந்தது. ஆனால் தற்போது ஒவ்வொருவராக எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தாவி வருகிறார்கள். தர்மயுத்தம் நடத்திய போது ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த மாஃபா பாண்டியராஜன் நேற்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தனது ஆதரவை அளித்தார்.

ஓபிஎஸ் ஆதரவாளர்
இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளரும் அவரது வலதுகரம் என சொல்லப்படுவருமான தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் வேளச்சேரி அசோக் தற்போது கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

அசோக்
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அசோக் கூறுகையில், அதிமுகவின் வளர்ச்சிக்கு ஒற்றைத் தலைமை இருக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிக்க வந்தேன். ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும், அதைத்தான் நான் செய்துள்ளேன். நாளை நடைபெறும் பொதுக் குழு கூட்டத்திற்கு ஓபிஎஸ் வருவார் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அங்கு எடுக்கப்படும் முடிவுகளை ஏற்பாரா என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றார்.

12 மாவட்டச் செயலாளர்கள்
ஓபிஎஸ்ஸுக்கு 12 மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 5 மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தாவினர். இதனால் ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்களின் பலம் 7 ஆக குறைந்தது. இந்த நிலையில் வேளச்சேரி அசோக் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தாவியதால் ஓபிஎஸ்ஸுக்கு மாவட்டச் செயலாளர்களின் பலம் 6 ஆக குறைந்துள்ளது.
-
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்!












Click it and Unblock the Notifications