பெட்ரோல் பங்க் பரிதாபங்கள்.. கோபி சுதாகருக்கு செம்ம கன்டென்ட் கிடைச்சிருக்கு.. வீடியோக்களை பாருங்க
சென்னை: சிலிண்டர் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற புதிய அச்சம் மக்களிடையே பரவி வருகிறது. நேற்று இரவு சென்னையில் பல்வேறு பெட்ரோல் பங்குகளில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள், பெட்ரோல் பங்குக்கு சென்று பெட்ரோல் வாங்கினார்கள். சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்கவே இதுதான் நிலைமை. இது தொடர்பாக வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள், பரிதாபங்கள் யூடியூப் சேனல் வைத்துள்ள கோபி சுதாகருக்கு செம்ம கன்டென்ட் கிடைச்சிருக்கு என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
நெட்டிசன் ஒருவர் கூறுகையில், சிலிண்டர் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற புதிய அச்சம் மக்களிடையே பரவி வருகிறது. நேற்று இரவு சென்னை வேளச்சேரியில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள், பெட்ரோல் பங்குக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல விழுப்புரம் நகரம், சூரப்பட்டு, கெடார், அரியலுார் திருக்கை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் குவிந்தனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் இந்த பதற்றம் உருவாகி வருகிறது.

முறையான தகவல்கள் இல்லாமல் பரப்பப்படும் வதந்திகளால் ஏற்படும் பதற்றம் நெருக்கடியை மேலும் அதிகமாக்கும் அபாயம் உள்ளது. இந்தியா முழுவதும் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் ஹோட்டல் உள்ளிட்ட தொழில்களும் எரிவாயு சார்ந்து இயங்கும் பிற தொழில்களும் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றது உண்மைதான்.
சிலிண்டர் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற புதிய அச்சம் மக்களிடையே பரவி வருகிறது.
— தமிழ் மார்க்ஸ் (@tamilmarxorg) March 12, 2026
நேற்று இரவு சென்னை வேளச்சேரியில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள், பெட்ரோல் பங்குக்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல விழுப்புரம்… pic.twitter.com/DWii7YN1wZ
எனினும் தற்சமயம் பெட்ரோல் டீசல் கட்டுப்பாடு உருவாகவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் நேற்றே விளக்கம் கொடுத்துள்ளன. எனவே மக்கள் தேவையற்ற பதற்றங்களில் சிக்கிக் கொள்ள வேண்டாம் அது நிலைமையை மேலும் மோசம் ஆக்கிவிடும் அபாயம் உள்ளது." என்று கூறியுள்ளார். அவர் பகிர்ந்த வீடியோவில் ஏராளமான வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்கில் குவிந்து இருந்தார்கள்.
என்ன சுதாகர் கோபி இந்த வார பரிதாபங்கள் கண்டென்ட் சிக்கிருச்சு போல!! pic.twitter.com/RYIxl1Gdqa
— கோயம்புத்தூரான் (@Coimbatoraan) March 12, 2026
இன்னொரு நெட்டிசன், என்ன சுதாகர் கோபி இந்த வார பரிதாபங்கள் கன்டென்ட் சிக்கிருச்சு போல!! என்று கேட்டு வீடியாவை பரப்பி இருந்தார். கேன்களில் மொத்தமாக மக்கள் பெட்ரோல் டீசல் வாங்கி சென்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
மூன்றாவதாக ஒரு நெட்டிசன் பகிர்ந்த வீடியோவில், தண்ணீர் கேனில் பெட்ரோல் வாங்கி சென்றுள்ளார். அதேபோல் இன்னொரு வீடியோவில் கும்பகோணத்தில் ஏராளமானோர் நள்ளிரவில் காத்திருப்பதாக வீடியோவில் இருக்கிறது.கும்பகோணம் மட்டுமல்ல,, தமிழ்நாடு முழுக்கவே இதுதான் நேற்று இரவு நிலைமையாக இருந்தது.
இந்த யூடியூப் சேனல் காரனுங்க கேப்சன் பாத்தாலே பயமா இருக்கு டா 😂 pic.twitter.com/gFRikkuAUu
— ᶠⁱʳᵉ𝐓𝐈𝐌𝐎𝐍 🔥 (@TimonTheFire) March 12, 2026
ஒரே நேரத்தில் பலரும் வந்ததால், பெட்ரோல் பங்குகளில் கூட்ட நெரிசல் மிகஅதிகமாக இருந்தது. கோபி சுதாகர் ஆகியோர் இந்த பிரச்சனையை எப்படியும் பரிதாபங்களில் பேசுவார்கள் என்பதால், செம்ம கன்டென்ட் கிடைத்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications