சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிஎப்ஐ அமைப்புக்கு தடை.. தமிழகம் வரும் வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்த திட்டம்.. தொடர் விசாரணை

Google Oneindia Tamil News

சென்னை: இந்தியாவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தின் வட்டக்கானலுக்கு வரும் வெளிநாட்டினரான யூதர்களை தாக்க சதித்திட்டம் தீட்டப்பட்டு இருந்தததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதிக்க உள்ளதாக சமீப காலமாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இதற்கு மத்தியில் தான்கடந்த 22ம் தேதி திடீரென்று என்ஐஏ, அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட மொத்தம் 15 மாநிலங்களில் 90க்கும் அதிகமான இடங்களில் சோதனை நடந்தது.

அடுத்த அதிர்ச்சி.. சென்னை உள்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு.. காரணத்தை பாருங்க அடுத்த அதிர்ச்சி.. சென்னை உள்பட 8 ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் கட்டணம் உயர்வு.. காரணத்தை பாருங்க

என்ஐஏ சோதனை

என்ஐஏ சோதனை

இந்த சோதனையானது பிஎப்ஐ எனும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு, எஸ்டிபிஐ கட்சியின் அலுவலகம், நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. பயங்கரவாதத்துக்கு நிதி உதவி செய்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி வழங்கல், பயங்கரவாத செயலுக்கு ஆட்சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. மொத்தம் 106 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகும் கூட கர்நாடகா, அசாம், குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்பட 8 மாநிலங்களில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போதும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு தடை

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவுக்கு தடை

இதன் தொடர்ச்சியாக தான் நேற்று பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு மத்திய அரசு இன்று அதிரடியாக தடை விதித்து உத்தரவிடப்பட்டது. 5 ஆண்டுகள் வரை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தவிர அதன் 8 பிற துணை அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தொடர்பாக விசாரணை அதிகாரிகள் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதன்விபரம் வருமாறு:

ஐஎஸ் பயங்கரவாதத்துக்கு ஆட்சேர்ப்பு

ஐஎஸ் பயங்கரவாதத்துக்கு ஆட்சேர்ப்பு

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தேசவிரோத செயல்களுக்காக இளைஞர்களை ஆட்சேர்க்க சமூக வலைதளங்களை பயன்படுத்தி உள்ளது. அன்சார் உல் கிலாபா கேரளா என்ற குழு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்சேர்த்துள்ளது. மேலும் சமூக வலைதளங்கள் வாயிலாக ஐஎஸ் பயங்கரவாதத்தின் சித்தாந்தங்களை பரப்பி உள்ளனர். இந்த விஷயத்தில் மன்சீத், ஸ்வாலித் முகமது, ரஷித் அலி சப்வான் மற்றும் ஜாசிம் ஆகியோர் கடந்த 2016ல் அக்டோபர் 2ம் தேதி கேரளா கண்ணூர் மாவட்டத்தில் அரசுக்கு எதிராக கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் வகையிலான கூட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட உள்ளது. அதோடு சமூக வலைதளங்கள் மூலம் நாட்டுக்கு வெளியே உள்ள சதிக்கார நபர்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

 பிஎப்ஐ உறுப்பினர்கள்

பிஎப்ஐ உறுப்பினர்கள்

இதில் ஸ்வாலித் முகமது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள கூட்டாளிகளிடம் இருந்து நிதி பெற்றதை மறைக்க முயன்றார். மேலும் அவர்கள் 'தி கேட்', 'பாப் அல் நூர்', 'ப்ளே கிரவுண்ட்' போன்ற பெயர்களில் டெலிகிராம் குழுக்களை உருவாக்கியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த போலீஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும் மக்கள் குவியும் இடத்தில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பில் தென்மாநிலங்கை சேர்ந்த 15 இளைஞர்கள் உள்ளனர். இதில் உள்ளவர்கள் பிஎப்ஐ உறுப்பினர்களாகவும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டவர்காகவும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் தாக்குதல் திட்டம்

தமிழ்நாட்டில் தாக்குதல் திட்டம்

மேலும் இந்தியா வரும் வெளிநாட்டினரை தாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்ட கொடைக்கானல் அருகே உள்ள வட்டக்கானல் மலைப்பகுதியில் வைத்து யூதர்களை தாக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுவாக யூதர்கள் ஆண்டுதோறும் விடுமுறையை கொண்டாட இங்கு வருகிறார்கள். இந்த வேளையில் தான் தாக்குதல் நடத்த ததிட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்களைத் தாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 சிரியா தொடர்பு

சிரியா தொடர்பு

மேலும் இந்தியாவில் ஐஎஸ் பயங்கரவாதியுடன் தொடர்பில் இருந்த கேரளாவை சேர்ந்த ஷாஜகான் பயங்கரவாத நடவடிக்கை தொடர்பாக துருக்கி/சிரியாவுக்கு சென்ற நிலையில் அங்கிருந்து நாடு கடத்தி வரப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் முந்தைய அமைப்பான நேஷனல் டெமாக்கிரட்டிக் ப்ரண்ட் அமைப்பில் செயல்பட்டு வந்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதன்பிறகு அவர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தார். அதன்பிறகு 2008 ல் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மீட்டிங்கில் பங்கேற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

English summary
In India, Popular Front of India has been banned for 5 years. In this case, shocking information has come out that a conspiracy was planned to attack the Jews who are foreigners coming to Vattakanal in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X