அச்சுறுத்தல்? அதிகாரிகளுக்கு நள்ளிரவில் திடீரென பறந்த உத்தரவு! ஓபிஎஸ் வீட்டில் குவிக்கப்பட்ட போலீஸ்!
சென்னை : அதிமுக அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக மாறி மாறி காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஓ பன்னீர்செல்வம் இல்லத்துக்கு திடீரென போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒரு வழியாக அதிகார மோதல்கள் முடிவுக்கு வந்திருந்தாலும் மழை விட்டாலும் தூறல் விடவில்லை என்பது போல பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகும் பெரும் பரபரப்பு நிறைவு வருகிறது
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிச்சாமி சென்னை வானகரம் புறப்பட்ட அதே நேரத்தில் தனது வீட்டில் இருந்து புறப்பட்ட ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி தனது தொண்டர்களுடன் படையெடுத்தார்.

அதிமுக தலைமை அலுவலகம்
இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வம் வருவதை அறிந்த எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் அவர் வருவதை தடுப்பதற்காக சென்னை ராயப்பேட்டை பகுதியில் அவ்வை சண்முகம் சாலையில் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை முற்றுகையிட்டனர். சென்னை நகரின் மிக முக்கிய பகுதியான ராயப்பேட்டை பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் மோதல்
இதனிடைய நேற்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வரும்போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தகராறு செய்ததால் கலவரம் உண்டானது. இருதரப்பினரும் கற்கள் மற்றும் கட்டைகளால் மாறி மாறி தாக்கி கொண்ட நிலையில் அந்த இடமே போர்க்களம் போல காட்சி அளித்தது. தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களின் கார்களை அடித்து நொறுக்கியதோடு தொண்டர்களையும் விரட்டி அடித்தனர். இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்தின் முன்பக்க கேட் மட்டும் கதவு உடைக்கப்பட்டு தொண்டர்கள் உள்ளே புகுந்த நிலையில் அங்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதா வழக்கமாக தொண்டர்களை சந்திக்கும் பால்கனியில் நின்று உற்சாகமாக கை அசைத்தார்.

போலீஸ் பாதுகாப்பு
தொடர்ந்து அங்கேயே இருந்து பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து கேட்டறிந்து கொண்டிருந்த நிலையில் அதிமுக அலுவலகத்தில் இருந்த முக்கிய கோப்புகள் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டது. இது தொடர்பாக எடப்பாடி தரப்பு புகார் அளித்ததையடுத்து இருவர் தரப்பினருக்கும் மேலும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் அலுவலகத்தினை பூட்டி சீல் வைக்க உத்தரவிடப்பட்டது. இதை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்து அதிகாரிகள் அதிமுக தலைமை அலுவலகத்தில் பூட்டி சீல் வைத்ததோடு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதனுடைய அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்துக்கு மிரட்டல்கள் வருவதாகவும் அவரது பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

பலத்த சோதனை
மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க இரு தரப்பினர் வீடுகளிலும் பாதுகாப்பினை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஓ.பன்னீர் செல்வத்தின் வீட்டில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் வழக்கமாக ஐந்து ஆயுதப்படை காவலர்கள் பணியில் இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக 15 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் பாதுகாப்பு இருமடங்காக அதிகரிக்கப்பட்டு தற்போது 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஓ பன்னீர்செல்வத்தினை சந்திக்க வருபவர்கள் பலத்த சோதனைகளுக்குப் பிறகு அனுமதிக்கப்படுகின்றனர்.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்!












Click it and Unblock the Notifications