சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொள்கைகளை குஸ்கா போட்டு விட்டு கூட்டணி அமைத்தால் இப்படித்தான் குண்டக்க மண்டக்க உளற நேரிடும்!

பிரச்சாரங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் சர்ச்சைகளை தெறிக்க விட்டு வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கொள்கைகளை பறக்கவிட்டால் இப்படித்தான் உளற நேரிடும்- வீடியோ

    சென்னை: அவங்கவங்க கட்சிகளுக்கு வேற யாரோ "ஆப்பு" வைக்க தேவையில்லை.. அவங்கவங்க கூட்டணி கட்சி தலைவர்களே குறிபார்த்து வைத்து கொண்டு இருக்கிறார்கள்!

    இந்த கட்சிதான்னு சொல்ல முடியாது.. இந்த தலைவர்னுதான் சொல்ல முடியாது.. பாரபட்சமற்ற முறையில் எல்லோருமே பிரச்சாரத்தில் உளறி கொட்டி வருகிறார்கள்.

    உளறல், சர்ச்சை என்றாலே தமிழக அமைச்சர்கள் ஒருசிலர் நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு கண் முன்னே வந்து நிற்கிறார்கள். குறிப்பாக திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ இருவருக்குமே இதில் சம பங்கு உள்ளது!

    சலிச்சு போச்சு

    சலிச்சு போச்சு

    இப்போது நிலைமை எப்படி ஆகிவிட்டது என்றால், "அட போங்கப்பா.. இவங்க ரெண்டு பேரும் என்னைக்கு சரியா பேசுறாங்களோ அந்த மேட்டரை வந்து உடனே சொல்லு.. இதெல்லாம் கேட்டு கேட்டு சலிச்சு போயிச்சு"என்று சொல்லும்படி ஆகிவிட்டது

    மீண்டும் அதிரடி சோதனை.. துரைமுருகன் மகனின் கல்லூரியில் ஐடி ரெய்டு.. நீடிக்கும் பதற்றம்!மீண்டும் அதிரடி சோதனை.. துரைமுருகன் மகனின் கல்லூரியில் ஐடி ரெய்டு.. நீடிக்கும் பதற்றம்!

    டாக்டர் ராமதாஸ்

    டாக்டர் ராமதாஸ்

    அதிமுக, திமுக.. இந்த கட்சிகளுக்கு மட்டும் மறந்துபோய்கூட ஓட்டு போட்டுடாதீங்கன்னு சொல்கிறார் பாமக நிறுவனர்! இதே ராமதாஸை மேடையில் வைத்து கொண்டே, அவரது கட்சி சின்னமான மாம்பழத்துக்கு பதில் ஆப்பிளை சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்! விஜயகாந்த் எப்பவுமே "ஒளிமயமான எதிர்காலம்" என்ற எம்ஜிஆர் பாட்டை பாடிக் கொண்டே இருப்பார் என்கிறார் பிரேமலதா!

    சகோதரி கனிமொழி

    சகோதரி கனிமொழி

    "தமிழச்சி தங்கப்பாண்டியன் ஓர் அழகான வேட்பாளர்" என்று உதயநிதி சொன்ன சலசலப்பு இன்னுமும் அடங்கவில்லை. முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் தூத்துக்குடியில், தமிழிசை சவுந்தராஜனுக்கு வாக்கு கேட்காமல், "பிரதமர் மோடியின் ஆசிபெற்ற அருமை சகோதரி கனிமொழி" என்று அழுத்தம் திருத்தமாக சொல்லி வாக்கு கேட்டார்.

    பிரபலம், பண பலம்

    பிரபலம், பண பலம்

    ஆக மொத்தம் என்ன நடக்கிறது என்றால்... யார் யார் எந்த எந்த கட்சியில் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாமல் குழம்பிபோய் உள்ளனர். வெறும் பிரபலத்தையும், பணத்தையும் வைத்து கொண்டு அரசியலுக்கு வந்துவிட்டு இவர்கள் படுத்தும் பாட்டையெல்லாம் மக்கள் வேடிக்கை பார்க்க வேண்டும் என்பது தலையெழுத்துபோலும்!

    முரசு - தாமரை

    முரசு - தாமரை

    தேர்தல் நேரம் வந்தாலே கட்சி கொள்கை, கோட்பாடுகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு கூட்டணி அமைத்தால், இப்படித்தான் மாம்பழம் ஆப்பிள் ஆகும், முரசு தாமரையாகும்! இவ்வளவு கேவலங்கள் வெளிப்படையாக மக்கள் முன் நடந்தும், சுதாரித்து கொண்டு தவறை திருத்தி கொள்கிறார்களே தவிர, யாரும் இதற்காக கொஞ்சம்கூட வருத்தப்பட்ட மாதிரியே தெரியவில்லை.

    கவனமா இருக்கணும்

    கவனமா இருக்கணும்

    5 ஆயிரம் 10 ஆயிரம் வாங்கிட்டு ஓட்டு போட்டால் இப்படித்தான் இவர்களின் உளறல்கள் இன்னமும் தொடரும் அவலம் ஏற்படும் என்பதால், மக்கள் சிந்தித்து பார்த்து ஓட்டு போடுவது இந்த சமயத்தில் மிக மிக அவசியமாகிறது!

    English summary
    TN Political party leaders are involved in the campaign. But leaders are stuck in a ticketing controversy. This has caused serious discontent among the people
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X