Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"டேய் ஏஜாஸ் எங்கடா?" அலறிய நண்பர்கள்! காசிமேடு கடலில் தத்தளித்தபடியே மூழ்கிய மாணவர்! பகீர் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை காசிமேடு கடலில் ஓடிவந்து குதித்து நீச்சல் தெரியாமல் மூழ்கி இறந்த மாணவரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    காசிமேடு கடலில் தத்தளித்தபடியே மூழ்கிய மாணவர்! பகீர் வீடியோ

    சென்னை தண்டையார்பேட்டை நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஏஜாஸ் (17), மகேஷ் குமார் (17), கிஷோர் குமார் (17), ஜெகதீஷ் (17) ஆகியோராவர். இவர்கள் 4 பேரும் நண்பர்கள்.

    இவர் புதுவண்ணாரபபேட்டையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன் தினம் இவர்கள 4 பேரும் பாலிடெக்னிக் கல்லூரிக்கு செல்லாமல் மதியம் 2 மணியளவில் காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று குளித்தனர்.

    3 பேரும்

    3 பேரும்

    இதை சக மாணவர் வீடியோ எடுத்தார். அப்போது 3 பேரும் கடலில் மூழ்கினர். இதை பார்த்த படகில் வந்த மீனவர்கள் அவர்களை காப்பாற்றினர். ஆனால் இதில் முகமது ஏஜாஸ் மட்டும் காணவில்லை. இது குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு படை வீரர்கள், கடலோர காவல் படையினர் ஆகியோர் மாயமான ஏஜாஸை தேடி வந்தனர்.

    காசிமேடு

    காசிமேடு

    இந்த நிலையில் காசிமேடு கடற்கரையில் முகமது ஏஜாஸின் உடல் கரை ஒதுங்கியது. போலீஸார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியானது.

    4 மாணவர்கள்

    4 மாணவர்கள்

    அதில் 4 மாணவர்களும் கடற்கரை நோக்கி ஓடி வருகிறார்கள். அதை ஒரு மாணவர் வீடியோ எடுக்கிறார். முதலில் ஏஜாஸ் குதிக்கிறார். பின்னர் இரு மாணவர்கள் குதிக்கிறார்கள். அப்போது ஏஜாஸ் என்ற மாணவர் உள்பட மூன்று பேரும் கடலில் தத்தளிக்கிறார்கள். அப்போது படகில் மீனவர்கள் வருகிறார்கள்.

    ஏஜாஸ் எங்கே

    ஏஜாஸ் எங்கே

    ஏஜாஸ் எங்கே ஏஜாஸ் எங்கே என வீடியோ எடுக்கும் மாணவர் கேட்கிறார், அந்த வீடியோவில் ஏஜாஸ் தத்தளிப்பதும், அவர் தண்ணீரில் மூழ்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பின்னர் தத்தளிக்கும் மாணவர்களிடம் வீடியோ எடுக்கும் மாணவன், "டேய் அப்படியே இரு, பயப்படாதே.. போட் வந்துடுச்சி" என்கிறார். விசாரணையில் ஏஜாஸுக்கு நீச்சலே தெரியாதாம்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+