பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர் போறீங்களா? செப்.12 முதல் ரயில் டிக்கெட் ரிசர்வேசன்
சென்னை:2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு சென்னையில் வசித்துவரும் பிற மாவட்டத்தினர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாடுவார்கள். சொந்த ஊர் செல்ல விரும்பும் மக்களுக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ஆம் தேதி தொடங்குகிறது.
பண்டிகை வந்தாலே அதை குடும்பத்தோடும் உறவினர்களோடும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். நவராத்திரி, தீபாவளி, பொங்கல் பண்டிகை என வரிசையாக பண்டிகைகள் வர உள்ளன. தொடர் விடுமுறையும் வர உள்ளதால் படிக்கவும், வேலை செய்யவும் வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள்.
சென்னை, கோவை, திருப்பூர், உள்ளிட்ட பெரும்பாலான ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். தென்னக ரயில்வேயும் ரயில் முன்பதிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தை பொங்கல் பண்டிகை
2023ஆம் ஆண்டு ஜனவரி 14ல் போகி பண்டிகை துவங்கி, 17ம் தேதி வரையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள் IRCTC இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்வர்.

ரயில் டிக்கெட் முன்பதிவு
தை பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்வோர் வரும் 12ம் தேதி முதல் தங்களது பயணத்திற்கு ஏற்ப ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள் ரயில்வேயில் 120 நாட்களுக்கு முன் டிக்கெட் எடுத்து கொள்ளும் வசதி இருக்கிறது. இதனால் வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள பயணிகள் முன்கூட்டியே ரயில் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.

முன்பதிவு எப்போது
பொங்கல் பண்டிகைக்கு செல்வோர், அடுத்த வாரம் முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி ஆம்10ம் தேதி பயணிக்க விரும்புவோர் வரும் 12ம் தேதியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கூடுதல் பெட்டிகள் இணைப்பு
தீபாவளி, பொங்கல் பண்டிகையின்போது, முன்பதிவு துவங்கிய அடுத்த சில நிமிடங்களில் டிக்கெட் விற்று தீர்ந்து விடும். ஏற்கனவே, தீபாவளிக்கு அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளன. காத்திருப்பு பட்டியல் அதிகமாக இருக்கும் வழித்தடங்களை தேர்வு செய்து சிறப்பு ரயில்கள் இயக்குவது, கூடுதல் பெட்டிகள் இணைப்பு போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications