சப்ஜெக்ட்க்கு பேச்சு வந்துருச்சு..பார்ஃமுக்கு வந்த நித்யானந்தா! இதற்காகத்தான் சமாதியில் இருந்தாராம்!
சென்னை : பாலியல் பலாத்காரம், பண மோசடி, கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கி தலைமறைவாக இருக்கும் சாமியார் நித்யானந்தா, கைலாசாவில் சமாதி நிலையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இவ்வளவு நாள் சாமாதி நிலையில் இருந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து அவர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
ஜல்சா அட் கைலாசா என்பது போல் ஆன்மீக ஆராய்ச்சி உள்ளிட்ட சித்து விளையாட்டுகளால் சின்னாபின்னமாகி இந்தியாவில் இருந்து தப்பிய நித்யானந்தா, ஆஸ்திரேலியா அருகே ஒரு தீவை வாங்கி அதை கைலாசா என பெயரிட்டு தனி நாடாக அறிவித்து அதன் அதிபராக தன்னை தானே அறிவித்துக் கொண்டார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக நித்யானந்தாவின் உடல்நிலை குறித்த பல்வேறு பகுதிகள் சமூக வலைதளங்களில் பரவியது. நித்யானந்தா கடுமையான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றுள்ளதாகவும் அவர்கள் உடல் நிலை மிக மோசமாக இருப்பதாக கூறப்பட்டது.

நித்யானந்தா உடல்நிலை
அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாகவும், அவரது சிறுநீரகம், நுரையீரல் ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் நோய்தொற்று காரணமாக உடல் மெலிந்து இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதனையடுத்து தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட நித்யானந்தா தான் தற்போது சமாதி நிலையில் இருப்பதாகவும், அதிலிருந்து வெளி வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவேன் என கூறி இருந்தார். அதன் பிறகு பல சர்ச்சைகள் வந்தபோதும் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

சமாதி நிலை
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தான் சமாதி நிலைக்கு சென்றதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். ஆங்கிலத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவை உங்களுக்கு மொழிபெயர்த்துள்ளதோடு சில முக்கிய தகவல்களை பார்க்கலாம்." அன்பான பக்தர்களே, சீடர்களே மற்றும் கைலாச வாசிகளே, உங்களது அனைவரின் நலனுக்காகவும், உலக நன்மைக்காகவும் மட்டுமே நான் நிர்விகல்ப சமாதியில் நிலைகொண்டுள்ளேன். ஏனென்றால் நான் அடைய வேண்டிய அனைத்தையும் வெகுகாலத்திற்கு முன்பே அடைந்துவிட்டேன், இனியும் எனக்காக என்று அடைய வேண்டியது எதுவுமே இல்லை.

நிர்விகல்ப சமாதியில் நித்தி
நிர்விகல்ப சமாதியில் இருப்பதனால் எனது உடல், பரமசிவனின் சக்திகள் இந்தப் பூவுலகில் இறங்குவற்கான ஒரு பிரபஞ்ச விமான நிலையமாக இயங்கிக் கொண்டிருக்கிறது, நீங்கள் அனைவரும் அதை அனுபவமாகப் பெற்றுக் கொண்டாட வேண்டும் என்பதற்காக. பிரம்மா கூட சமாதியில் இருந்தபடியே தான் படைப்புத் தொழிலை செய்து கொண்டிருக்கிறார். மேன்மை மிக்க அனைத்து வெளிப்பாடுகளும் சமாதியில் நிலைகொள்ளுவதன் மூலம் மட்டுமே நிகழும்.
Recommended Video

நேரடி பதில்
நான் உங்களுள் இருந்து உங்களுடன் இதை பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை எனது அனைத்து சீடர்களும் தெளிவாக காண்பீர்கள். நான் நிர்விகல்ப சமாதியில் செலவிடும் இந்த காலத்தை உங்கள் வாழ்க்கைக்காக நான் செலவழிக்கும் பயனுள்ள நேரமாக நான் கருதுகிறேன். ஏனென்றால் நான் நிர்விகல்ப சமாதியில் இருக்கும்போது, உங்கள் கேள்விகளுக்கு என்னால் நேரடியாக பதில் சொல்ல முடிகிறது, நீங்கள் கேட்கும் வரங்களை அருள முடிகிறது. வளப்படுத்துங்கள், அனுபவியுங்கள் கொண்டாடுங்கள். பகிருங்கள், ஆனந்தத்துடன் கொண்டாடுங்கள்." என கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications