குழி பறிக்கும் ‘வார் ரூம்’.. பாஜகவினரை காலி செய்யும் அண்ணாமலை! "அசிங்கம்”.. அதிரவைத்த மாரிதாஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அண்ணாமலையின் வார் ரூம் தொடர்பாக காயத்ரி ரகுராம் கிளப்பிய குற்றச்சாட்டு பாஜக வட்டாரத்திலேயே பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆதரவு யூடியூபரான மாரிதாஸ் அண்னாமலையின் 'வார் ரூம்' திமுகவை எதிர்ப்பதை விட்டுவிட்டு சொந்தக் கட்சிக்குள் இருப்பவர்களை காலி செய்யவே பயன்படுத்தப்படுகிறது, இந்த வார் ரூம் பாஜகவுக்கே குழி தோண்டும் என்று விமர்சித்துள்ளார்.

அண்ணாமலை, பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு கட்சியின் சீனியர்களை மதிப்பதில்லை, அவர்களை ஓரங்கட்டி வருகிறார் என்ற பொறுமல் தொடர்ந்து இருந்து வருகிறது. சமீபகாலமாக, பாஜகவில் எழுந்து வரும் குழப்பங்களும் அந்த பின்னணியில் தான் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அண்ணாமலையின் வார் ரூம் தொடர்பாக டெல்லி தலைமைக்கு சீனியர்கள் புகார்களை பறக்க விட்டுள்ளனராம். பாஜகவின் தீவிர ஆதரவாளரான யூடியூபர் மாரிதாஸ், அண்ணாமலையின் வார் ரூமை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காயத்ரி எழுப்பிய பகீர் குற்றச்சாட்டு

காயத்ரி எழுப்பிய பகீர் குற்றச்சாட்டு

தமிழக பாஜகவில் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவராக இருந்த காயத்ரி ரகுராம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனான கடும் மோதலைத் தொடர்ந்து அவர் மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து, பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். காயத்ரி ரகுராம் அண்ணாமலை மீது வைத்த முக்கியமான குற்றச்சாட்டு தமிழக பாஜகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அது அண்ணாமலையின் வார் ரூம் பற்றியது. அண்ணாமலையின் ஆதரவாளர்கள் காயத்ரி ரகுராமை கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் கோபமடைந்தார் காயத்ரி.

வார் ரூம் அட்டாக்

வார் ரூம் அட்டாக்

அண்ணாமலை தலைமையிலான வார் ரூமில் இருந்து மிகவும் மோசமான கேவலமான தனிப்பட்ட தாக்குதல்களை நாங்கள் சந்திக்கிறோம். பெண்களைப் பற்றி அவதூறான கருத்துகளைப் பரப்புகிறார்கள். தமிழக காவல்துறை இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார் காயத்ரி ரகுராம். அண்ணாமலை, நூற்றுக்கணக்கான தனது ஆதரவாளர்களைக் கொண்டு சமூக வலைதளங்களில் தனக்கு விளம்பரம் செய்யவும், எதிர்க்கட்சிகளை விமர்சிக்கவும் கணக்குகளை நடத்தி வருகிறார் என எதிர்க்கட்சிகள் முன்னரே விமர்சித்திருந்தாலும், பாஜகவில் இருந்தே வந்த இந்தக் குரல் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அண்ணாமலைக்கு எதிராக

அண்ணாமலைக்கு எதிராக

கடந்த சில வாரங்களாக அண்ணாமலைக்கு எதிராக பாஜகவில் கடுமையான குற்றச்சாட்டுகளை காயத்ரி ரகுராம் முன்வைத்து வரும் நிலையில், அண்ணாமலை மீது டெல்லிக்கும் பல்வேறு புகார்கள் பறந்திருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழக பாஜகவில் இருக்கும் சீனியர்கள் பலரும், அண்ணாமலையின் வார் ரூம் பற்றி டெல்லி தலைமைக்கு புகார்களை தட்டி உள்ளனராம். தனக்கு விளம்பரம் செய்வதற்காகவும், தனக்கு எதிரானவர்களை காலி செய்யவுமே அண்ணாமலை வார் ரூம் வைத்திருக்கிறார், பாஜகவை வளர்ப்பதற்கு அல்ல என்று டெல்லியில் போட்டுக் கொடுத்திருக்கிறார்களாம்.

போலி ஐடிகள்

போலி ஐடிகள்

இந்நிலையில், பாஜக ஆதரவு யூடியூபரான மாரிதாஸும், அண்ணாமலையின் வார் ரூம் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துப் பேசி இருக்கிறார். இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள மாரிதாஸ், அண்ணாமலையின் வார் ரூம் திமுகவை எதிர்ப்பதை விட்டுவிட்டு கட்சிக்குள் இருப்பவர்களை காலி செய்யவே பயன்படுத்தப்படுகிறது. காயத்ரி ரகுராம் மீது 1000 போலி ஐடிகளை உருவாக்கி அவதூறு பரப்புகிறார்கள். கட்சிக்கு உழைத்த பெண்ணை கருத்து வேறுபாடு காரணமாக அவரது தனிப்பட்ட வாழ்க்கையை அருவருப்பாக எழுதி வருகிறார்கள்

கட்சிக்கு குழி தோண்டும் வார் ரூம்

கட்சிக்கு குழி தோண்டும் வார் ரூம்

அண்ணாமலை வார் ரூம் பயன்படுத்துவதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது. நம்மை கேள்வி கேட்க யாரும் கிடையாது, நான் சொல்வது தான் நியாயம், நான் சொல்வது தான் சட்டம் என்று இருந்தால் இந்த வார் ரூம் பாஜகவுக்கு குழி தோண்டும். பாஜகவில் தொடர்ந்து சர்சைகள் ஏற்படுவதால், கட்சிக்கு வெளியே உள்ள பாஜக ஆதரவாளர்கள் நிறைய பேர் இதனை அசிங்கமாக கருதுகிறார்கள். அவர்கள் தங்களுடைய அரசியல் பிழைப்புக்காக பாஜகவை கெடுத்து குட்டிச் சுவராக்குகிறார்கள்

ஹனி ட்ராப்

ஹனி ட்ராப்

கே.டி.ராகவனை திட்டமிட்டே ஹனி ட்ராப்பில் சிக்க வைத்து கட்சியிலிருந்து காலி செய்திருக்கிறார்கள். யார் யாரை வெளியேற்ற வேண்டுமோ அவர்களை பெண்களை வைத்து தொடர்புபடுத்தி காலி செய்கிறார்கள்." என்று பேசியுள்ளார். பாஜகவின் தீவிர ஆதரவாளரான மாரிதாஸும் தற்போது அண்ணாமலையை விமர்சித்துப் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. மாரிதாஸ் சமூக வலைதளங்களில் தெரிவித்த கருத்துக்காக அவர் கைது செய்யப்பட்டபோது பாஜகவினர் அவருக்கு ஆதரவாகத் திரண்டு வந்தனர். மாரிதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அப்போது பாஜகவினர் போராட்டங்களிலும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+