சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வினாத்தாள் லீக்..அச்சம் வேண்டாம்...பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு; அதில் பெறும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும்; அதுவும் பாதுகாப்பாக நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. வினாத்தாள் லீக் குறித்து பெற்றோர்களும் மாணவர்களும் அச்சப்பட வேண்டாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. வினாத்தாள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த வாரம் முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்வு நடத்தப்படுவது போல ஒரு பள்ளியில் நடத்தப்படும் தேர்வுகளின் வினாத்தாள்கள் மற்றொரு பள்ளியில் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 3 பேர்.. ஸ்டாலினுக்கு வந்த போன்.. அடுத்த மூவிற்கு ரெடியான மம்தா.. வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு? 3 பேர்.. ஸ்டாலினுக்கு வந்த போன்.. அடுத்த மூவிற்கு ரெடியான மம்தா.. வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு?

பொதுத்தேர்வு போல நடைபெறும் இந்த தேர்வில் கடந்த இரு தினங்களாக வினாத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் லீக் ஆகின்றன. பிளஸ் 2 வேதியியல், கணிதம், உயிரியல், வணிகவியல், வணிக கணிதம், வினாத்தாள்கள் லீக் ஆனது. இதே போல பத்தாம் வகுப்பில் அறிவியல் வினாத்தாள் கசிந்தது. வினாத்தாள்கள் லீக் ஆனது எப்படி என்பது குறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் விசாரணை மேற்கொண்டது.

கேள்வித்தாள் லீக்

கேள்வித்தாள் லீக்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளியாகி விட்டதாக நேற்று முன்தினம் நள்ளிரவு தகவல் பரவியது. இதனால் திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரபரப்பு எழுந்தது.இதில் சில தேர்வுகளுக்கான வினாத்தாள் தேர்வு நடைபெறும் முன்பே சமூக வலைதளங்களில் வெளிவந்ததாக செய்தி ஊடங்கள் வழியாக அறியப்பட்டதன் அடிப்படையில், துறை ரீதியாக விரிவான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விசாரணை

விசாரணை

வினாத்தாள் லீக் விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து ஆய்வு நடத்திய பள்ளிக்கல்வித்துறை இந்த வினாத்தாள் கசிவதற்கு காரணமாக இருந்த அரசு அலுவலகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கெனவே வெளியான தேர்வு அட்டவணையின்படி தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை

தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். 10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.

இயற்பியல் வினாத்தாள் லீக்

இயற்பியல் வினாத்தாள் லீக்

தமிழ்நாட்டில் நாளை நடைபெற இருந்த பிளஸ் 2 இயற்பியல் தேர்வு வினாத்தாளும் இன்று முன்கூட்டியே வெளியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பெற்றோர்கள், மாணவர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சார்பில் ஒரு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

 பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

பள்ளிகல்வித்துறை அறிவிப்பு

இது, பள்ளிகல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன் மதிப்பெண் ஒருபோதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. கட்டாயம் இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும், அதுவும் பாதுகாப்பான முறையில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த மாதமும் ஒரு திருப்புதல் தேர்வு பொது தேர்வு மாணவர்களுக்கு இருக்கிறது. எனவே பெற்றோர்களும் மாணவர்களும் அச்சப்பட வேண்டாம். மூன்று மணி நேரம் மாணவர்கள் தேர்வு எழுத பயிற்சி பெற வேண்டும் என்பதற்காகவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

 ஆல்பாஸ் கனவில்

ஆல்பாஸ் கனவில்

கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு நடைபெறாமல் போனால் இந்த மதிப்பெண்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வார்கள் என்று பல மாணவர்கள் நினைத்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகாலமாக ஆல்பாஸ் ஆகி வந்த மாணவர்கள் இந்த ஆண்டும் பிளஸ் 2விலும் பத்தாம் வகுப்பிலும் ஆல்பாஸ் ஆகிவிடலாம் என்று நினைத்துக்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தெளிவாக புரியும் வகையில் மாணவர்கள் பொதுத்தேர்வு கண்டிப்பாக எழுத வேண்டும் என்று உறுதியாக கூறியுள்ளது பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம்.

முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

இதனிடையே 10, 12 ஆம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொறுப்பு அலுவலராக விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

இதனிடையே 10, 12 ஆம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் திருவண்ணாமலை முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொறுப்பு அலுவலராக விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

English summary
Question Paper leak: (வினாத்தாள் லீக் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ) Public examination will be compulsory for 10th and 12th class students; The Department of Education has announced that that too will be conducted safely. An announcement has been made on behalf of the school education department that parents and students should not be afraid of the question paper league.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X