தலைநகர் சென்னையில்.. திடீரென வேகமெடுக்கும் மெட்ராஸ் ஐ பாதிப்பு.. என்ன காரணம்.. அறிகுறிகள் என்னென்ன
சென்னை: தலைநகர் சென்னையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் இப்போது பருவ மழை தொடங்குகிறது. மாநிலத்தில் பரவலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
இதனிடையே காலநிலை மாற்றம் காரணமாகத் தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் மெட்ராஸ் ஐ வேகமாகப் பரவி வருகிறது.

மெட்ரால் ஐ
சில நாட்களில் மட்டும் மெட்ரால் ஐ காரணமாக மருத்துவமனைக்குச் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி குறைந்தது 50 பேர் வரை மெட்ராஸ் ஐ சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வருவதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். மெட்ராஸ் ஐ எளிதாகக் குணப்படுத்தக் கூடி நோய் தான் என்றாலும் கூட உரிய நேரத்தில் சிகிச்சை தேவை என்பதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காலநிலை மாற்றம்
இப்போது பருவ மழைக் காலம் தொடங்கி உள்ள நிலையில், இந்த காலநிலை மாற்றம் காரணமாகவே தலைநகர் சென்னையில் மெட்ராஸ் ஐ வேகமாகப் பரவி வருகிறது. கண் விழி மற்றும் இமையை இணைக்கும் ஜவ்வு படலத்தில் வைரஸ் தொற்று ஏற்படும்போதே இந்த மெட்ராஸ் ஐ ஏற்படுகிறது. இது காற்றின் மூலம் மிக வேகமாகப் பரவும் திறன் கொண்டது. எனவே, ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டால், அது விரைவாக மற்றவர்களுக்குப் பரவும் ஆபத்து உள்ளது.

அறிகுறி
கண் சிவந்து போதல் கண்ணில் இருந்து நீர் சுரந்து கொண்டே இருப்பது ஆகியவை இதன் முக்கிய அறிகுறியாகும். கண் எரிச்சல் மற்றும் இமை பகுதி ஒட்டிக் கொள்தல் ஆகியவையும் மெட்ராஸ் ஐயின் முக்கிய அறிகுறியாக இருக்கிறது. மேலும், வெளியே செல்லும்போது கண் கூச்சமாகவும் இருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் ஏற்படும் போது, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

எளிதாக பரவும்
இந்த மெட்ராஸ் ஐ பாதிப்பு மிக எளிதாகப் பரவக் கூடும். மெட்ராஸ் ஐ-ஆல் பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தினால், இது எளிதாக மற்றவர்களுக்குப் பரவக் கூடும். இது குடும்பத்தில் ஒருவருக்கு வந்துவிட்டால், மிக எளிதாக மற்றவர்களுக்குப் பரவிடும். எனவே, மெட்ராஸ் ஐ பாதிப்பு உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

கவனம் தேவை
குறிப்பாக ஏசி அறையில் இருந்தால், அந்த பாதிப்பு மிக வேகமாகப் பரவக் கூடும். பெரும்பாலும், இந்த பாதிப்பு மருத்துவச் சிகிச்சை உடன் எளிதாகவே குணமடைந்துவிடும். மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்பட்டால் 4 நாட்கள் வரை தனி அறையில் இருக்க வேண்டும். தனி பொருட்களையே பயன்படுத்த வேண்டும். உரியச் சிகிச்சை எடுத்துக் கொண்டால் மெட்ராஸ் ஐ பாதிப்பு விரைவாகவே சரியாகிவிடும். ஆனால், உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் பார்வையில் தெளிவற்ற நிலையும் கூட ஏற்படும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications