சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எழுச்சி எல்லாம் வராது.. அவர் வருவதே சந்தேகம்தான்.. ஒதுங்கும் மா.செக்கள்.. என்ன செய்வார் ரஜினிகாந்த்?

நடிகர் ரஜினிகாந்தின் புதிய அரசியல் நிலைப்பாடு காரணமாக அவரின் ரசிகர்கள், மாவட்ட செயலாளர்கள் அவரை விட்டு ஒதுங்க தயாராக இருப்பதாக தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் புதிய அரசியல் நிலைப்பாடு காரணமாக அவரின் ரசிகர்கள், மாவட்ட செயலாளர்கள் அவரை விட்டு ஒதுங்க தயாராக இருப்பதாக தகவல்கள் வருகிறது.

Recommended Video

    ரஜினியின் ஒரே பேட்டி... 8 விதமான ஏமாற்றங்கள்

    கடந்த இரண்டு வாரத்தில் ரஜினிகாந்த் மொத்தம் இரண்டு முறை மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடன் சந்திப்பு நடத்தினார். அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை ரஜினிகாந்த் இதில் மேற்கொண்டார்.

    இந்த ஆலோசனைக்கு பின் நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் கொடுத்த பேட்டி அவரின் ரசிகர்களை கலங்கடித்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து இப்போதும் அவரின் ரசிகர்கள் வெளியே வரவில்லை. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து, தீவிரமாக அரசியல் செய்வார் என்று ஆசைப்பட்ட அவரின் ரசிகர்களுக்கு, அந்த செய்தியாளர் பேட்டி பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

    மத்தவங்க ஏதாவது சொன்னா, வடிவேலு மீம்ஸ வச்சி கிண்டல் பண்றீங்க.. ரஜினி சொன்னா வடிவேலே கிண்டல் பண்றாரு மத்தவங்க ஏதாவது சொன்னா, வடிவேலு மீம்ஸ வச்சி கிண்டல் பண்றீங்க.. ரஜினி சொன்னா வடிவேலே கிண்டல் பண்றாரு

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    நடிகர் ரஜினிகாந்த் தனது பேட்டியில் இரண்டு முக்கிய விஷயங்களை குறிப்பிட்டார். ஒன்று, என் கட்சியில் நிர்வாகிகளுக்கு தேர்தலின் போது அளிக்கப்படும் பதவிகள், தேர்தலுக்கு பின் நீக்கப்படும். கட்சியில் நிரந்தர பதவிகள் இருக்காது. தேர்தலுக்காக உருவாக்கப்படும் பதவிகள் தேர்தலுக்கு பின் நீக்கப்படும். இதன் மூலம் ஊழல்கள் தடுக்கப்படும்,என்றார். இரண்டாவதாக, எனக்கு முதல்வர் பதவி வேண்டாம். நான் கட்சிக்கு தலைவர், ஆட்சிக்கு வேறு ஒரு தலைவர் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார்.

    என்ன கோபம்

    என்ன கோபம்

    இதுதான் ரசிகர்களின் அதிர்ச்சிக்கு காரணம். தங்களுக்கு கட்சியில் பதவி எதுவும் கிடையாது என்று கூறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதேபோல் நான் முதல்வர் கிடையாது என்று ரஜினி கூறியதும், அவரின் ரசிகர்களுக்கு பெரிய இடியாக வந்துள்ளது. இதனால் ரஜினியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலக சில மாவட்ட செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    என்ன திட்டம்

    என்ன திட்டம்

    இந்த திட்டத்திற்கு காரணம் உள்ளது. ரஜினியின் ரசிகர்கள் பலர் திமுக, அதிமுகவில் இருக்கிறார்கள். இவர்களுக்கு அங்கு பெரிய பதவிகள் எதுவும் இல்லை. இவர்கள் எல்லாம் ரஜினியுடன் சேர்ந்து கட்சியில் ஏதாவது பதவி பெறலாம். அப்படியே பெரிய ஆளாக வளரலாம் என்று திட்டமிட்டனர். திமுக, அதிமுகவில் கிடைக்காத மரியாதை தங்களுக்கு ரஜினியின் கட்சியில் கிடைக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் தேர்தல் நேரத்தில் மட்டுமே பதவி என்று ரஜினி உறுதியாக கூறிவிட்டார்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    ரஜினியின் இந்த திட்டம், அவரின் கட்சியில் சேரலாம் என்று நினைத்த சில திமுக, அதிமுக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. அதேபோல் மக்கள் மன்றத்திற்காக தீவிரமாக உழைத்த சில மாவட்ட செயலாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது. எங்களுக்கு பதவி இல்லை என்றால் நாங்கள் எப்படி முன்னேறுவது. நாங்கள் இதற்கு திமுக, அதிமுகவில் சேர்ந்து விடலாம் , பதவி இல்லாமல் நாங்கள் எப்படி பணிகளை செய்வது என்று புலம்பி வருகிறார்கள்.

    விலக தொடங்கினார்கள்

    விலக தொடங்கினார்கள்

    அதோடு முதல்வர் பதவி வேண்டாம் என்று கூறிய ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதே சந்தேகம்தான். அவரை நம்பி இனியும் காத்திருக்க முடியாது. நாங்களும் முன்னேற வேண்டும். இத்தனை நாட்கள் காத்திருந்த எங்களுக்கு ஏமாற்றமே மிச்சம் என்று வடதமிழக ரஜினி மக்கள் மன்ற செயலாளர்கள் பலர் புலம்பி வருகிறார்கள். இவர்கள் எல்லாமே விரைவில் ரஜினிக்கு எதிராக போர்க்கொடி தூக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    English summary
    Actor Rajini Kanth speech erupts anger among fans, May leave Makkal Mandram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X