செம்மொழி விருது பெற்ற லுக் செவ்வியார்! பிரான்ஸ் நாட்டு அறிஞர்! யார் இவர்? ரவிக்குமார் எம்பி விளக்கம்
சென்னை: மு.கருணாநிதியின் செம்மொழி தமிழ் விருது பெற்ற ழான் லுக் செவ்வியார் யார் என்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்பி ரவிக்குமார் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவில் கூறுகையில்,
இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழறிஞர்களுக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை அளித்திருக்கிறார். நேரடியாக விருதைப் பெற்ற தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் திரு ம.இராசேந்திரன் அவர்களைத் தொலைபேசியில் அழைத்து என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இன்று விருதுபெற நேரில் வர முடியாத ழான் லுக் செவ்வியார் குறித்து தமிழ்நாட்டில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரைப் பற்றி 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாத உயிர்மை இதழில் நான் எழுதியதை இங்கு பகிர்கிறேன்:

தமிழின் பெருமை
தமிழின் பெருமையை உலகறியச் செய்தவர்களின் பட்டியலைத் தயாரித்தால் அதில் கணிசமான பெயர்கள் அயல்நாடுகளைச் சேர்ந்தவர்களுடையதாய் இருக்கும். இன்றும்கூடத் தமிழின் தொன்மை குறித்த விவாதங்களில் தமிழை ஆதரித்து முன்வரிசையில் நிற்பவர்கள் அவர்கள்தான். அவர்களுள் சிலரை நாம் அறிவோம். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி ஜார்ஜ் ஹார்ட்டின் பெயர் சற்றே கூடுதல் கவனம் பெற்றது. ஆனால் இன்னும் பலர் குடத்திலிட்ட விளக்காய் இருக்கின்றனர். அப்படியானவர்களில் ஒருவர்தான் ழான் லுக் செவ்வியார். அவர் , ஃப்ரான்சில் இருக்கும் சி.என்.ஆர்.எஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்தவர். அங்கு மொழியியல் வரலாற்றுத் துறையில் பணிபுரிகிறார்.

இலக்கண மரபு
தமிழ் இலக்கண மரபின் வரலாற்றை ஆராய்வதற்காக அவர் இப்போது பாண்டிச்சேரியில் இருக்கும் ஃபிரெஞ்ச் இன்ஸ்டிட்யூட்டிற்கு வந்திருக்கிறார். சேனாவரையத்தை ஃபிரெஞ்ச்சில் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழ் இலக்கண வரலாறு குறித்து பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.'க்ளாசிகல் தமிழ்' என்ற மடல்குழுவையும் அவர் நிர்வகித்து வருகிறார். அவரைச் சில நாட்களுக்கு முன்பு சந்தித்தேன். ஃபிரெஞ்ச் இன்ஸ்டிட்யூட்டில் பணிபுரியும் கண்ணனோடு நட்பாக இருந்த காலத்தில் காலையிலும் மாலையிலும் அங்கு நான் போவதுண்டு. அப்போது அவரைப் பலமுறை பார்த்திருக்கிறேன் என்ற போதிலும் அறிமுகம் ஏற்பட்டதில்லை.

கணினித் தேவாரம்
இப்போதுதான் அந்த நல்லூழ் வாய்த்தது. தான் தொகுத்து வெளியிட்டிருக்கும் கணினித் தேவாரம் குறுந்தகட்டை திரு. செவ்வியார் எனக்குப் பரிசாகக் கொடுத்தார். அதைத் தனது மடிக்கணினியில் போட்டு விளக்கவும் செய்தார். அப்பர், சுந்தரர் , ஞானசம்பந்தர் என்னும் மூவரால் பாடப்பட்ட எண்ணூறு பாடல்களைக்கொண்டதுதான் தேவாரம். பன்னிரு திருமுறை என்னும் சைவ நூல்களுள் தலையாய இடத்தை வகிப்பது அது. பலராலும் அது பதிப்பிக்கப்பட்டிருக்கிறது.

தேவாரப் பாடல்கள்
தேவாரப் பாடல்களை இசையோடு பாடக்கூடியவிதத்தில் வரிசைப்படுத்திப் பதிப்பித்திருக்கும் முறைக்கு 'பண்முறை' என்றும், அந்தப் பாடல்களில் இடம்பெற்றிருக்கும் தலங்களின் அடிப்படையில் வரிசைப்படுத்திப் பதிப்பித்திருக்கும் முறைக்கு 'தலமுறை' என்றும் பெயர். இந்தக் குறுந்தகட்டில் இரண்டு வடிவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. எழுபதுகளில் துவங்கிய தேவார மொழிபெயர்ப்புத் திட்டத்தின் தொடர்ச்சியாக 1997 ஆம் ஆண்டு இந்த குறுந்தகடு தயாரிப்புத் திட்டம் உருவானது.

மொழிபெயர்ப்பு
காலஞ்சென்ற வி.எம்.சுப்ரமண்ய அய்யர் (1905& 1981) தேவாரத்தை மொழிபெயர்த்தார். சுமார் 3500 பக்கங்களில் கையெழுத்துப் படிகளாக அந்த மொழிபெயர்ப்பை அவர் விட்டுச் சென்றுள்ளார்.அது இந்த குறுந்தகட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேவாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தலங்களைக் குறித்த வரைபடங்கள் நூற்றுக்கும் மேல் இதில் உள்ளன. ஊரின் பெயரைச் சொடுக்கினால் போதும் அந்த தலத்தைப்பற்றிய எல்லா விவரங்களும் தெரிந்துவிடும். இப்போது அங்கே இருக்கும் கோயில்களின் புகைப்படங்களும் இந்தக் குறுந்தகட்டில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

ஓதுவார்
தேவாரப் பாடல்களை தருமபுரத்தில் இருந்த ஓதுவார் பள்ளி மாணவர்களைக்கொண்டும் வேறு சிலரைக் கொண்டும் பாடச் செய்து 109 பதிவுகளாக இதில் தந்திருக்கிறார்கள். மொத்தம் ஏழு மணி நேரம் அந்த இசையை நாம் கேட்கலாம். ஓதுவார் பள்ளி மாணவர்களுக்கு எந்தப் பாடத்திட்டம் பின்பற்றப்பட்டது என்ற விவரங்களும் விரிவாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த கணினித் தேவாரத்தைப் படித்தும், கேட்டும் முடிக்கும்போது மிகப்பெரிய பயணத்தை மேற்கொண்டதுபோன்ற உணர்வும் நிறைவும் நமக்கு ஏற்படுகிறது.

10 ஆண்டுகள்
சுமார் பத்து ஆண்டு கால உழைப்பின் விளைபொருளாய் இந்தக் குறுந்தகடு திகழ்கிறது. ஒரு பணியை எவ்வளவு சிறப்பாகச் செய்யமுடியும் என்பதற்கு இதுவொரு உதாரணம். திரு. செவ்வியார் அவர்களின் புலமையையும், உழைப்பையும் பார்க்கும்போது தமிழ் ஆய்வில் தனக்கென்று தனி முத்திரையைப் பதிக்கக்கூடிய ஒருவர் உருவாகிவருவதைப் புரிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications