பிஎம் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் சூப்பர் பலன்.. பிரதமரின் இலவச வீடு கட்டுவதில் அசத்தல்! யாருக்கு சான்ஸ்
சென்னை: கிராமப்புறங்களில் சொந்த வீடு இல்லாமல் வாழும் ஏழை, எளிய மக்களின் வீட்டு கனவை நனவாக்கும் நோக்கில் மத்திய அரசு தொடங்கிய திட்டமே பிரதம மந்திரி கிராமின் ஆவாஸ் யோஜனா. பிரதமர் மோடி தலைமையில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை முன்வைத்து செயல்படுத்தப்பட்டு, இப்போது 2029ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதிகள்? யார் யார் விண்ணப்பிக்கலாம்? ஆவணங்கள் என்னென்ன? இதனை சுருக்கமாக பார்க்கலாம்.
பிஎம் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் வீடற்ற மக்களுக்கு சொந்தமாக வீடு கட்டுவதற்காக அரசால் நேரடி நிதியுதவி வழங்கப்படுகிறது. சமவெளி பகுதிகளில் வீடு கட்டுவோருக்கு ரூ.1.20 லட்சமும், மலைப்பகுதிகளில் வசிப்பவர்களுக்கு ரூ.1.30 லட்சமும் வழங்கப்படுகிறது. வழங்கப்படும் இந்த நிதி முழுவதுமாக பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படுகிறது.

வாடகை வீட்டுதாரர்களுக்கு சர்ப்ரைஸ்
இதனுடன், வீட்டின் மேற்கூரை அமைப்பதற்காக மாநில அரசு சார்பில் கூடுதலாக ரூ.50,000 நிதியுதவியும் வழங்கப்படுகிறது. தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் ரூ.12,000 மதிப்பிலான கழிப்பறையும் கட்டிக் கொடுக்கப்படுகிறது. உதவித்தொகை மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.
மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், வீடு கட்டும் பணிக்காக 90 நாட்கள் வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வீடு கட்டுவதற்காக கூடுதல் பணம் தேவைப்படும் நிலையில், வங்கிகள் மூலம் ரூ.70,000 வரை வீட்டுக் கடன் பெறும் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.
சொந்த வீடு பெற தகுதிகள் என்னென்ன
இந்த திட்டத்தின் பயன்களை பெற விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாகவும், 18 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில், விண்ணப்பிப்பவருக்கு சொந்தமாக வீடு இருக்கக்கூடாது. ரேஷன் கார்டு அல்லது பிபிஎல் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்க வேண்டும். மேலும், கட்டப்படும் வீடு பயனாளியின் முதல் வீடாக இருக்க வேண்டும் என்பது கட்டாய நிபந்தனையாகும்.
மத்திய அரசு உதவித்தொகை யார் யாருக்கு கிடைக்கும்
சொந்த வீடு அல்லது நிலம் இல்லாத வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்கள், எஸ்சி/எஸ்டி மற்றும் சிறுபான்மையினர், சட்டப்பூர்வமாக விடுவிக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், மனித கழிவுகளை கையால் அகற்றும் துப்புரவு பணியாளர்கள், மலைவாழ் மக்கள் ஆகியோர் தகுதி பெறுவார்கள்...
மேலும், 16-59 வயதுக்குள் ஆண் உறுப்பினர் இல்லாத குடும்பங்கள், விதவைகள் அல்லது திருமணமாகாத பெண்கள் தலைமையிலான எஸ்சி/எஸ்டி குடும்பங்கள், இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட எஸ்சி/எஸ்டி குடும்பங்கள் மற்றும் போரில் உயிரிழந்த பாதுகாப்பு படையினர் அல்லது துணை ராணுவத்தினரின் மனைவி அல்லது நெருங்கிய உறவினர்களும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியானவர்கள்.
பிஎம் ஆவாஸ் யோஜனா
கடந்த 20 ஆண்டுகளில் அரசின் வீட்டு வசதி திட்டங்களின் கீழ் ஏற்கனவே பயன் பெற்றவர்கள், மூன்று அல்லது நான்கு சக்கர வாகனங்கள், விவசாய இயந்திரங்கள் அல்லது மீன்பிடி படகு வைத்திருப்போர், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கடன் பெறத் தகுதியான கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போர் இந்த திட்டத்திற்கு தகுதி இல்லை.
மேலும், தொழில் வரி அல்லது வருமான வரி செலுத்துவோர், அரசுப் பணியில் உள்ளவர்கள் அல்லது மாதம் ரூ.10,000க்கும் மேல் வருமானம் பெறும் நபர் உள்ள குடும்பங்கள், 2.5 ஏக்கருக்கு மேல் பாசன நிலம், பல பயிர் பருவங்களுக்கு 5 ஏக்கர் அல்லது அதற்கு மேல் பாசன நிலம், அல்லது மொத்தமாக 7.5 ஏக்கர் நிலம் கொண்ட குடும்பங்களும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்க முடியாது.
ஆவணங்கள் என்னென்ன
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிபிஎல் சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்புக் நகல், பான் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, விண்ணப்பதாரருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இந்தியாவில் சொந்தமாக நிரந்தர வீடு இல்லை என்பதை உறுதி செய்யும் பிரமாணப் பத்திரம் ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அருகிலுள்ள பொது சேவை மையத்தில் நேரில் சென்று திட்டத்திற்கான விண்ணப்பத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களுடன் ஊராட்சி அல்லது நகர மன்ற அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பிறகு அது வட்டார அல்லது மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பப்படும். அங்கு ஒப்புதல் கிடைத்தால், விண்ணப்பதாரர் பிரதம மந்திரி கிராமின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பயனாளியாக சேர்க்கப்படுவார்.
ஆன்லைன் விண்ணப்பம்
பிரதான் மந்திரி கிராமின் ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க pmayg.nic.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று முன்பக்கத்தில் உள்ள Awaassoft → Data Entry → Data Entry for Awas என்பதை தேர்வு செய்ய வேண்டும். பிறகு மாநிலம், மாவட்டம் தேர்ந்தெடுத்து பெயர், பாஸ்வேர்டு, கேப்ட்சா மூலம் லாகின் செய்ய வேண்டும்.
திறக்கும் விண்ணப்ப படிவத்தில் தனிப்பட்ட விவரங்கள், வங்கி கணக்கு தகவல்கள் மற்றும் ஸ்வச் பாரத் மிஷன் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்பிய பின் rhreporting.nic.in வெப்சைட்டில் பயனாளி பட்டியலை சரிபார்க்கலாம்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications