ஐலேசாவான கைலாசா! கோமா என்பதெல்லாம் ட்ராமாவா? புது ரூட்டில் ஆட்டைய போட திட்டம் போட்ட நித்யானந்தா..!
சென்னை : உடல்நலக்குறைவு, கோமா, சமாதி நிலை என அடுத்தடுத்து பக்தர்கள் மூலமே திட்டமிட்டு வதந்தி பரப்பிய சாமியார் நித்யானந்தா, தற்போது ஆன்மீக வகுப்புகள் என்ற பெயரில் பக்தர்கள் என வரும் நபர்களிடம் 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை பணத்தை பறிக்க திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளது
பாலியல் பலாத்காரம், கடத்தல், மோசடி போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சமூக வலைதளங்களில் தினந்தோறும் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.
மீண்டும் வருவேன்..அதிரடி எண்ட்ரி.. நித்யானந்தா அறிவிப்பால் உற்சாகத்தில் சீடர்கள்

சாமியார் நித்யானந்தா
இதுகுறித்து நித்யானந்தா தனது கைப்பட எழுதிய கடிதத்தோடு வெளியிட்ட பதிவில், நான் இறக்கவில்லை. சமாதி நிலையில் இருக்கிறேன். 27 டாக்டர்கள் எனக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் என கூறியிருந்தார். அதன்பிறகு அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில் என்னால் உணவு சாப்பிட முடியவில்லை. எனக்கு தூக்கம் வரவில்லை என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நித்யானந்தா கோமா நிலைக்கு சென்று விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது.

கோமா நிலை
ஆனால் அதனையும் மறுத்து நித்தியானந்தா மீண்டும் ஒரு கடிதத்தை வெளியிட்டார். அதில் தற்போது சமாதி நிலையில் இருக்கும் நான் பரமசிவனை நேரடியாக தரிசித்து நிறைய சக்திகளைப் பெற்றுக் கொண்டு மீண்டும் வந்து பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்குவேன் என கூறியிருந்தார். இந்த நிலையில்தான் நித்தியானந்தா நடத்துவது மீண்டும் ஒரு மோசடி நாடகம் என்றும் ஆன்மீக வகுப்பு என்ற பெயரில் பக்தர்களிடம் பெரிய தொகையை ஆட்டைய போட அவர் பிளான் செய்து வருவதும் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

பலே திட்டம்
இந்தியாவில் பல பக்தர்கள் இருந்து சுருட்டிய பணம் மற்றும் தங்க நகைகளுடன் ஆஸ்திரேலியா அருகில் உள்ள ஒரு தீவில் பதுங்கிய நித்யானந்தா, அங்கு குறைந்த விலையில் உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக கூறி இருந்தார். இந்த நிலையில்தான் பெருமளவிலான வருமானம் தடைபட்ட நிலையில், அன்றாட செலவுகளுக்கு கூட அல்லல்படும் நிலைக்கு நித்யானந்தா தள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆன்மீக வகுப்புகள்
இதன் காரணமாகவே கோமா, சமாதி உள்ளிட்ட நாளுக்குநாள் பொய்களை அவிழ்த்து விட்டு வரும் நித்யானந்தா தற்போது பரமசிவனை சந்தித்து வந்ததாகவும் அந்த சக்திகளை பக்தர்களுக்கு மீண்டும் வழங்குவேன் என கூறி அவர்களிடம் கல்லா கட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது நடைபெற உள்ள ஆன்மீக வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்கள் 10 முதல் 15 லட்சம் ரூபாய் வரை செலுத்தினால் மட்டுமே பங்கேற்க முடியும் எனவும், இதன் மூலம் ஒரு பெரிய தொகையை திரட்ட நித்தியானந்தா திட்டமிட்டிருப்பதாக அவர்களது முன்னாள் சீடர்கள் கூறுகின்றனர்.
Recommended Video

சதி அம்பலம்
அதுமட்டுமல்லாது உடல்நலக் குறைவு காரணம் காட்டி மீண்டும் இந்தியா வந்து சிகிச்சை என்ற பெயரில் தப்பித்து விடலாம் என நித்தியானந்தா திட்டமிட்டிருப்பதாகவும் ஆனால் தற்போது அது சாத்தியமில்லை என்பதால் தற்போது பக்தர்களை ஏமாற்றி வரும் பணத்தில் சிறிது காலத்தை ஆஸ்திரேலியா அருகில் உள்ள தீவிலேயே கழிக்க நித்யானந்தா திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காகவே உடல்நலக்குறைவு கோமா என தனது சீடர்கள் மூலம் திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்பி அதன் மூலம் மத்திய மாநில அரசுகளை ஏமாற்றி சிறிது காலம் மருத்துவமனையில் தங்கலாம் என அவர் திட்டமிட்டது தற்போது தெரியவந்துள்ளது.