"சிலருக்கு பொறாமை இருப்பது உண்மை தான்.." மனம் விட்டு பேசிய சஞ்சு சாம்சன்! என்ன இப்படி சொல்லிட்டாரு
சென்னை: டி20 உலக கோப்பை தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு சஞ்சு சாம்சன் முக்கிய காரணமாக இருந்திருந்தார். இதற்கிடையே பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக அபிஷேக் சர்மா உடனான உறவு, இருவருக்கும் இடையேயான பார்ட்னர்ஷிப் குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் நடந்த முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கலக்கல் வெற்றியைப் பெற்றது. இந்த தொடரில் இந்தியா சார்பில் அதிக ரன்கள் எடுத்த வீரராக சஞ்சு சாம்சன் உருவெடுத்தார். மொத்தமாக ஐந்து இன்னிங்ஸ்களில் 321 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சனின் சராசரி 80.25ஆகும். மேலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 199.37ஆகும்

அபிஷேக் ஷர்மா
இதற்கிடையே தனது சக தொடக்க வீரரான அபிஷேக் ஷர்மாவுடனான பார்ட்னர்ஷிப் குறித்து சஞ்சு மனம் திறந்து பேசியுள்ளார். தங்கள் இணை இயல்பாகவும், சீராகவும் அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இருவருமே மாறி மாறி அதிரடி காட்டுவதால் "பையர்- பையர்" பார்ட்னர்ஷிப் இது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இருவருக்கும் இடையே புரிதல் சிறப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அபிஷேக்கின் துணிச்சல், நிதானம் மற்றும் களத்திலும் வெளியிலும் உள்ள நட்பை ரசிப்பதாகவும் சாம்சன் தெரிவித்தார்.
ரொம்ப ஈஸி
இது தொடர்பாகப் பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடேவிடம் பேசுகையில், "நாங்கள் ஐஸ்- பையர் என நேர் எதிர் துருவங்கள் இல்லை.. நாங்கள் பையரும் -பையரும் போல.. சில சமயங்களில் அவர் அதிரடி காட்டுவார், சில சமயங்களில் நான் அதிரடி காட்டுவேன்.. 2024 முதல் நாங்கள் கேரளா- பஞ்சாப் நண்பர்களைப் போலத் தான் விளையாடுகிறோம். அனைத்தும் இயல்பாகவே நடப்பதால், எங்களுக்குள் எதுவும் சிக்கலாக்குவதில்லை. பேட்டிங் பிடிக்கும்போது பந்து எப்படி வருகிறது என்று அவர் கேட்பார்.. பால் வழக்கமாகவே இருக்கிறது.. சிக்ஸ் அடிக்கலாம் என நான் கூறுவேன். எங்கள் உரையாடல் இப்படி தான் இருக்கும்.
அந்தளவுக்கு எளிமையானது. அபிஷேக் மிகவும் துணிச்சலானவர், நிதானமானவர். எங்கள் இருவருக்கும் இடையே ஒரு புரிதல் இருக்கிறது. களத்திலும் வெளியேயும் அவருடனான உறவை நான் ரசிக்கிறேன்" என்றார். அபிஷேக் சர்மா மிகக் குறுகிய காலத்தில் சர்வதேச அணியில் இடம் பிடித்திருந்தார். ஐபிஎல் தொடரில் கலக்கிய அபிஷேக் சர்மா, உடனடியாக டி20 அணியில் இடம் பிடித்திருந்தார். நட்சத்திர வீரராகவும் உருவெடுத்தார். இப்படி அபிஷேக் சர்மா தொடக்கத்திலேயே நட்சத்திர அந்தஸ்து பெற்றது இந்திய வீரர்களைப் பொறாமை அடையச் செய்ததாகவும் சாம்சன் மேலும் தெரிவித்தார்
பொறாமை
அவர் மேலும், "தொடக்கத்தில் அபிஷேக், அபிஷேக் என எங்குப் போனாலும் அவரது கோஷமே கேட்கும்போது சிலருக்குப் பொறாமை இருந்தது. எங்கும் 'அபிஷேக், அபிஷேக்' என்றே சத்தம் இருக்கும். டீமில் இவர் மட்டும் தானா இருக்கிறார்.. ஏன் இப்படி எனக் கூட நாங்கள் நினைத்தோம். ஆனால், இப்போது அவர் அணியின் சூப்பர் ஸ்டார் தான். அவரிடம் நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.. சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்" என்றார்.
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சாம்சன்- அபிஷேக் இணை, நியூசிலாந்து பந்து வீச்சாளர்களைத் திணறடித்தது. பவர்ப்ளேயில் 98 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு வலுவான தொடக்கத்தை அளித்தது. இந்த அபார தொடக்கம் இந்தியாவை இறுதிப்போட்டியில் 255 ரன்கள் எடுக்க வழிவகுத்தது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்களை எடுத்தார். அதேபோல அபிஷேக் சர்மாவும் 21 பந்துகளில் 52 ரன்களை குவித்தார்.
இந்தியா வெற்றி
256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய நியூசிலாந்து அணி, 19 ஓவர்களில் 159 ரன்களை எடுத்து ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி மூன்றாவது டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது. இதன் மூலம் சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்தியா தனதாக்கியது.
இந்த தொடரில் சஞ்சுவின் கம்பேக்கை நாம் குறிப்பிட்டுப் பாராட்டியே தீர வேண்டும். முதலில் சில போட்டிகளில் சோபிக்காததால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் சவால்களைத் தாண்டி, தொடரின் பிற்பாதியில் அவர் முக்கிய வீரராக மாறினார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நாக்அவுட், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி, நியூசிலாந்து இறுதிப் போட்டி எனத் தொடர்ந்து அரை சதங்கள் அடித்து, இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications