சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதே லெட்டர் பேடு.. "உங்களுக்கு எவ்ளோ பிரச்சினை இருந்தாலும், அதுக்காக?".. போட்டுத்தாக்கும் சசிகலா

சசிகலா முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: வழக்கம்போலவே அதிமுக கழக பொதுச்செயலாளர் என்ற லெட்டர் பேடில் சசிகலா அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது.. அதில், முதல்வர் முக ஸ்டாலினுக்கு முக்கிய கோரிக்கையை வைத்துள்ளார்..!

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சம்பா, தாளடி என சுமார் 3.5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன... அறுவடை பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்கிறது...

கோவை ஜல்லிக்கட்டு: செந்தில்பாலாஜியை அதிர வைத்த சசிகலா, டிடிவி தினகரன் காளைகள் - தங்க மோதிரம் பரிசு கோவை ஜல்லிக்கட்டு: செந்தில்பாலாஜியை அதிர வைத்த சசிகலா, டிடிவி தினகரன் காளைகள் - தங்க மோதிரம் பரிசு

 வாணிபக் கழகம்

வாணிபக் கழகம்

டெல்டா மாவட்டங்களில் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல் நிலையங்கள் இப்போது வரை திறக்கப்பட்டுள்ளன... ஆனால் குறிப்பிட்ட சில பகுதிகள் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது... அதேபோல, விவசாயிகள் தங்களுடைய நெல்லை விற்க ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது... இப்படி செய்வதால், ஆன்லைன் பதிவு வாயிலாக விற்பது விவசாயிகளுக்கு சிறப்பானதாக இருக்கும் என்று அரசு தரப்பு யோசிக்கிறது..

விவசாயிகள்

விவசாயிகள்

ஆக மொத்தம், இது விவசாயிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.. காரணம், அதில் சில நடைமுறை சிக்கல்களை அரசு கண்டுகொள்வதில்லை என்றும், ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே நெல்லை கொள்முதல் செய்வதாகவும் கருதுகிறார்கள்.. எனவே, ஆன்லைன் முறை அல்லாமல் பழைய நடைமுறையை தொடர வேண்டும் என்று கோரிக்கை வலுவாக வைத்தனர்..

அறிக்கை

அறிக்கை

இதற்கு அரசும் ஒப்புக் கொண்டது, ஆன்லைனில் பதிவுசெய்யும் பொருட்டு ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் தனி ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்தது... ஆனால், இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இப்படிப்பட்ட சூழலில்தான், சசிகலா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.. அதில் உள்ளதாவது:

விற்பனை

விற்பனை

"ஆன்லைன் நடைமுறையில் ஏற்பட்டுள்ள குளறுபடியால் சாகுபடி செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகளை தவிக்க வைத்த அரசை வன்மையாக கண்டிக்கிறேன். கடந்த ஆண்டுகளில் விவசாயிகள் விஏஓவிடம் சென்று சிட்டா அடங்கல் வாங்கிவிட்டு, அதனை கொள்முதல் நிலையங்களில் கொடுத்தாலே போதும். ஆனால் ஆன்லைன் முறையால் அரசு இ-சேவா மையங்களில் பதிவுசெய்து அதனை விஏஓவிடம் கொடுத்து சிட்டா அடங்கல் பெற்று நெல்லை விற்பனை செய்ய வேண்டியிருக்கிறது. ஆன்லைன் பதிவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தாவிட்டால் படிப்பறிவு பெற இயலாத விவசாயிகளால் என்ன செய்ய முடியும்?

கொள்முதல்

கொள்முதல்

புரட்சித்தலைவர், அம்மா அவர்கள் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செய்துள்ளனர். ஆனால் திமுக அரசு அணுகுமுறைகளைப் பார்க்கும்போது விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்யும் விருப்பம் இல்லாதது போல் தெரிகிறது. உங்களுக்கு எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் விவசாயிகளைக் காப்பாற்ற முன் நிற்க வேண்டும். ஆகவே பழைய நடைமுறையின்படியே விவசாயிகள் நெல்லை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். இதுபோன்ற ஜீவாதார பிரச்சினைகளில் தனிக்கவனம் செலுத்தி அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தால் தான் விவசாயிகளையும் காப்பாற்ற முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
Sasikala says about paddy procurement system and released a Statement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X