DMK Seat Sharing: திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? இதுவரை முடிந்த ‘டீல்’ லிஸ்ட்!
சென்னை: திமுக கூட்டணியில் தற்போது வரை 21 கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், 2 கட்சிகளுக்கு அதிகாரப்பூர்வமாக தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து, ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 229 தொகுதிகளுக்கு இன்னும் 19 கட்சிகள் இடையே சீட் பகிர்வு நடைபெற உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வெகுவிரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் அறிக்கை தயாரிப்பு, வாக்குறுதிகள், விருப்ப மனு விநியோகம் என தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன. மறுபுறம், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு பேச்சுகளும் தீவிரமடைந்துள்ளன.

திமுக, கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் நடத்தி வருகிறது. இதுவரை காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கொமதேக, மமக, ஐயூஎம்எல், விசிக, தவாக, மக்கள் விடுதலை கட்சி, மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ, மஜக, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு
தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புதிதாக இணைந்துள்ளதால் ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் சீட் எண்ணிக்கையை குறைக்க திமுக முடிவு செய்துள்ளது. திமுகவை பொறுத்தவரை குறைந்தபட்சம் 170 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர்களைக் களமிறக்க திட்டமிட்டுள்ளது.
திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளுக்கும் தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான தொகுதி உடன்பாடு ஒப்பந்தம் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அறிவாலயத்தில் கையெழுத்தானது. முஸ்லிம் லீக் 2 தொகுதிகளிலும் அவர்கள் ஏணி சின்னத்திலும், மமக 2 தொகுதிகளில் திமுக சின்னத்திலும் போட்டியிட உள்ளது.
இதுவரை அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்ட சீட்
1. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 2 (ஏணி சின்னம்)
2. மனிதநேய மக்கள் கட்சி - 2 (உதயசூரியன்)
திமுக கூட்டணியில் தற்போது வரை இடம்பெற்றுள்ள கட்சிகள்
1. திமுக
2. காங்கிரஸ்
3. மதிமுக
4. இந்திய கம்யூனிஸ்ட்
5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
6. விடுதலை சிறுத்தைகள்
7. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
8. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
9. மனிதநேய மக்கள் கட்சி
10. அகில இந்திய பார்வர்டு பிளாக்
11. தமிழக வாழ்வுரிமை கட்சி
12. மக்கள் விடுதலை கட்சி
13. ஆதித்தமிழர் பேரவை
14. மக்கள் நீதி மய்யம்
15. தேமுதிக
16. எஸ்டிபிஐ
17. மனிதநேய ஜனநாயகக் கட்சி
18. முக்குலத்தோர் புலிப்படை
19. கொங்கு இளைஞர் பேரவை
20. திராவிட வெற்றிக் கழகம்
21. புதிய திராவிட கழகம்
-
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
விட்டு கொடுக்காத திமுக.. விஜய்யுடன் நேருக்கு நேர் போட்டி.. பெரம்பூர் சிட்டிங் எம்எல்ஏக்கு வாய்ப்பு -
ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி.. வைத்திலிங்கம், மனோஜ் பண்டியனுக்கு எந்த தொகுதி? விவரம்! -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
“ரெஸ்ட்டா? எனக்கா?” 13வது முறையாக தேர்தலில் களமிறங்கும் துரைமுருகன்.. மீண்டும் காட்பாடியில் போட்டி! -
மதுரை வடக்கு வேட்பாளர் கோ.தளபதி.. மதுரையில் 7 தொகுதிகளில் களமிறங்கும் திமுக.. யாருக்கு வாய்ப்பு? -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம்












Click it and Unblock the Notifications