Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Nallakannu: கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் நிலையில் பின்னடைவு.. ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் (Nallakannu Health) பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1 ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நல்லகண்ணு தொடர்ந்து 20 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று மதியம் அவர் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 101). வயதுமூப்பின் காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி திடீரென வீட்டில் தவறி விழுந்ததில் காயமடைந்தார்.

Nallakannu Health

மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதி

இதில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி மீண்டும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் சிகிச்சை முடிந்து கடந்த மாதம் (ஜனவரி) 8 ஆம் தேதி குணமடைந்து வீடு திரும்பினார். தொடர்ந்து வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நல்லகண்ணுக்கு மீண்டும் கடந்த 1 ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பின்னர் உடனடியாக அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் மூத்த மருத்துவர்கள் குழுவினர் கண்காணித்து அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இதையடுத்து அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், மருத்துவர் குழு கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நிலையில் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நல்லகண்ணுவின் உடல்ந்லையில் இன்று பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இதையடுத்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்த தகவல் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+