Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாய்ப்பே இல்லை.. என்ன டக்குனு சரத் பவார் இப்படி சொல்றாரே? அப்போ ஸ்டாலினுக்கு போன "அந்த" போன் கால்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கட்சி கூட்டத்தில் பேசிய கருத்து ஒன்று விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜூலை மாதம் 18ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. ஜூலை 21ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

குடியரசுத் தலைவராக உள்ள ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதி முடியும் நிலையில், இந்த முறை பாஜக கூட்டணிக்கு எம்பி, எம்எல்ஏ எல்லாம் சேர்த்து 5.42 லட்சம் வாக்குகள் உள்ளன. எதிர்க்கட்சிகளின் திமுக, காங்கிரஸ் எல்லாம் சேர்த்து 4.49 லட்சம் வாக்குகள் கொண்டு உள்ளன. இந்த தேர்தலில் மொத்தம் 10.82 லட்சம் வாக்குகள் உள்ளன. ஒரு எம்பிக்கு 700 வாக்குகள் உள்ளன. இந்த தேர்தலில் 51 சதவிகித வாக்குகள், அல்லது அதற்கு கூடுதலாக வாக்குகள் பெறும் நபர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.

எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள்

இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக அறிவிக்கும் வேட்பாளருக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை களமிறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வரும் 16ம் தேதி ஆலோசனை செய்ய மேற்கு வங்க முதல்வர் மம்தா பாஜக அல்லாத முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

கூட்டணி வேட்பாளர்

கூட்டணி வேட்பாளர்

இந்த நிலையில்தான் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்மொழியலாம் என்று தகவல்கள் வந்தன. சரத் பவார் மூத்த தலைவர். எதிர்க்கட்சி தலைவர்களுடன் நட்பாக இருக்க கூடியவர். பல கூட்டணிகளை உருவாக்கிய அரசியல் சாணக்கியர்,. இதனால் அவரை எதிர்க்கட்சிகள் முன்னிறுத்தும் என்று தகவல்கள் வந்தன. கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே சரத் பவரை சந்தித்தார்.

சரத் பவார்

சரத் பவார்

இந்த சந்திப்பில் சரத் பவாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக களமிறக்க காங்கிரஸ் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அவரிடம் இதை பற்றி கார்கே நீண்ட நேரம் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சரத் பவார் குடியரசுத் தலைவர் வேட்பாளராகலாம் என்று கூறப்பட்டது. ஆனால் சரத் பவார் குடியரசுத் தலைவர் வேட்பாளராக விரும்பவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று என்சிபி மீட்டிங் ஒன்று நடந்தது.

 என்சிபி கூட்டம்

என்சிபி கூட்டம்

அதில் பேசிய சரத் பவார், எனக்கு குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஆகும் விருப்பம் இல்லை. அந்த விருப்பம், திட்டம் இல்லை. நான் ரேஸில் இல்லை என்று சரத் பவார் கட்சி கூட்டத்தில் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரபூர்வமாக சரத் பவார் தனது மறுப்பை தெரிவிக்கவில்லை. விரைவில் தனது நிலைப்பாட்டை அவர் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்கிறார்கள். முன்னதாக சரத் பவாரை சந்தித்த கார்கே அதன்பின் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், உத்தவ் தாக்கரேவிற்கும் போன் செய்து பேசி இருக்கிறார்.

கார்கே

கார்கே

இதில் சரத் பவாரை பொது எதிர்க்கட்சி வேட்பாளராக அறிவிப்பது தொடர்பாக இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. சரத் பவாரை ஆதரிப்பது தொடர்பாக இவர்கள் பேசியதாக கூறப்படுகிறது. ஆனால் இப்போது திடீரென சரத் பவார் பின்வாங்கும் முடிவை எடுத்து இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பு குறைவு என்பதால், இந்த வயதில் போட்டியிட்டு தோல்வி அடைய சரத் பவார் விரும்பவில்லை என்று என்சிபி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+