சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது என்னடா சூரியனுக்கு வந்த பிரச்சனை.. இன்னும் "இத்தனை" வருஷம்தான் உயிரோட இருக்குமாம்?.. போச்சே!

Google Oneindia Tamil News

சென்னை: சூரியன் இன்னும் எத்தனை காலத்திற்கு உயிரோட இருக்கும்.. இன்னும் எத்தனை காலத்திற்கு இதேபோல் பிரகாசமாக வெப்பத்தை வெளியிடும் என்று ஸ்பேஸ் கிராப்ட் ஒன்று கண்டுபிடித்துள்ளது.

The Gaia spacecraft எனப்படும் கையா ஸ்பேஸ் ஆராய்ச்சி கருவி ஐரோப்பா மூலம் 2013ல் அனுப்பப்பட்டது ஆகும். இது விண்வெளியில் உள்ள பொருட்களின் தூரம், காலம், வயது, வேகம் உள்ளிட்ட பல விஷயங்களை கணிக்க உதவும்.

விண்வெளியில் செயல்படும் நவீன் மேப் போன்றது இது என்று கூறலாம். நட்சத்திரங்களின் முந்தைய இருப்பிடம், இப்போதைய இருப்பிடம், கோள்கள் நகரும் விதம் என்று பல விஷயங்களை The Gaia spacecraft கண்டுபிடிக்கும்.

அதோடு பல நட்சத்திரங்களின் பிறப்பு, சிறப்புகளையும் கூட இது ஆய்வு செய்து வருகிறது.

பிறப்பு இறப்பு

பிறப்பு இறப்பு

அதாவது நட்சத்திரங்கள் தோன்றிய போது எப்படி இருந்தது. இப்படி எப்படி இருக்கிறது என்பதையும் பல நட்சத்திரங்களை ஒப்பிட்டு The Gaia spacecraft ஆய்வு செய்து வருகிறது. நமது சூரியனின் அளவில் இருக்கும் நட்சத்திரங்களையும் கூட The Gaia spacecraft ஆய்வு செய்து வருகிறது. அதாவது நமது சூரியன் அளவில் இருக்கும்.. ஆனால் சூரியனை விட வயது அதிகம் இருக்கும் மற்ற நட்சத்திரங்களை The Gaia spacecraft ஆய்வு செய்துள்ளது.

ஒப்பீடு

ஒப்பீடு

இவற்றை ஒப்பீடு செய்து வரும் காலங்களில் சூரியன் எப்படி எல்லாம் மாற்றம் அடையும் என்று கணிப்புகளை The Gaia spacecraft வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது சூரியன் 4.57 பில்லியன் ஆண்டுகள் வயதானதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் தற்போது சூரியன் மிடில் ஏஜில் உள்ளது. அதாவது நடுத்தர வயது. 35-40 வயது என்று சொல்லலாம். இப்போது சூரியனில்போதுமான ஹைட்ரஜன், ஹீலியம் உள்ளது.

குறையும்

குறையும்

இதனால் சூரியனின் வெப்பம் குறையாது. இதன் காரணமாகவே சூரியனில் தற்போது புழுதி புயல், சூரிய புயல் போன்ற ஆக்டிவ் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சமீபத்தில் கூட சூரியனில் ஏற்பட்ட சோலார் புயல் காரணமாக 17 coronal mass வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 8 பில்லியன் ஆண்டுகளுக்கு சூரியனுக்கு இப்படி அதிக வெளிச்சம் மற்றும் ஆற்றல் இருக்கும். அதன்பின் சூரியன் கூல் ஆகும்.

பெரிதாகும்

பெரிதாகும்

சூரியனின் வெப்பம் குறைந்து அது அளவில் பெரிதாகும். இதை ரெட் ஜெயிண்ட் என்று கூறுவார்கள். அதாவது இன்னும் மூன்றரை பில்லியன் ஆண்டுகளுக்கு பின் சூரியன் இந்த நிலையை அடையும். ரெட் ஜெயிண்ட் ஆன பின் சூரியன் 1011 பில்லியன் ஆண்டுகள் அதே நிலையில் இருக்கும். அதன்பின் அவை அழிந்து போகும். அதன் ஆற்றல் மொத்தாமாக குறையும் என்று கையா ஸ்பேஸ் ஆராய்ச்சி கருவி டேட்டா தெரிவித்துள்ளது. சூரியனின் அளவில் இருக்கும் மற்ற நட்சத்திரங்களை ஒப்பிட்டு இந்த டேட்டாவை கையா ஸ்பேஸ் ஆராய்ச்சி கருவி வெளியிட்டுள்ளது.

English summary
Sun is going through a middle crisis now too: When it will turn off? சூரியன் இன்னும் எத்தனை காலத்திற்கு உயிரோட இருக்கும்.. இன்னும் எத்தனை காலத்திற்கு இதேபோல் பிரகாசமாக வெப்பத்தை வெளியிடும் என்று ஸ்பேஸ் கிராப்ட் ஒன்று கண்டுபிடித்துள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X