Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் அட்டைகள் குறித்த முக்கிய அறிவிப்பு.. மாற்றம், திருத்தம் தேவையா?.. இதோ இதை படிங்க

ரேஷன் அட்டைகளில் மாற்றங்கள் செய்யப்படுவது குறித்த ஆய்வு சென்னையில் நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில், அடிக்கடி புதுபுது அறிவிப்புகள் வெளியாகி வரும் நிலையில், மீண்டும் ஒரு மகிழ்ச்சி அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..

இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன..

 அமைச்சர் தகவல்

அமைச்சர் தகவல்

மற்றொரு புறம், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 அமைச்சர் சக்கரபாணி

அமைச்சர் சக்கரபாணி

இதனிடயே, நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.. அத்துடன் ரேஷன் கடைகள் குறித்த புது புது அறிவிப்புகள் சட்டசபையில் அடிக்கடி வெளியாகி கொண்டே இருக்கிறது.. அந்தவகையில், நியாய விலைக் கடைகளில் கண் கருவிழி சரி பார்க்கும் முறை முன்னோட்டத் திட்டமாக செயல்படுத்தப்படும் என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.

சென்னை

சென்னை

இந்நிலையில், குடும்ப அட்டைகளில் மாற்றங்கள் செய்யப்படுவது குறித்த ஆய்வு ஒன்று நாளை காலை சென்னையில் நடக்கிறது.. ரேஷன் அட்டைகளில் ஏதாவது மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள், நாளை நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதந்தோறும் மக்கள் குறைதீர் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது...

 குறைகள்

குறைகள்

அந்த வகையில், சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை காலை 10 மணி முதல் முகாம் நடக்க உள்ளது.. இதன் காரணமாக பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பொது விநியோகத் திட்டம் மற்றும் குடும்ப அட்டை சம்பந்தமான குறைகளுக்கு தீர்வு காணலாம் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+