Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சும்மா ஸ்டைலா கெத்தா முதல்வர்! சென்னை செஸ் ஒலிம்பியாட் 2022 வீடியோ! டீசரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள வீடியோவின் டீசரை சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையின் மாமல்லபுரத்தில் ஜூலை 28 ஆம் முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை 'செஸ் ஒலிம்பியாட் 2022' நடைபெற இருக்கிறது.

அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 200 நாடுகளிலிருந்து இரண்டாயிரம் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி

செஸ் ஒலிம்பியாட் போட்டி

1927 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இதுவரை ஒருமுறை கூட இந்தியாவில் நடைபெறவில்லை என்ற நிலையில் இந்தியாவில் அதுவும் சென்னையில் நடைபெற இருப்பது சர்வதேச அளவில் தமிழகத்தை உற்று நோக்க வைக்கும் எனக் கருதப்படுகிறது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் விழாவுக்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சென்று இதுகுறித்த பணிகளை ஆய்வு செய்தார்.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று 7.30 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டீசரை அவர் வெளியிடுவார் என முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார்.

வீடியோ டீசர்

வீடியோ டீசர்

அதன்படி, செஸ் ஒலிம்பியாட் 2022க்கான வீடியோ டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். மாமல்லபுரம் மற்றும் சென்னையின் முக்கிய அடையாளங்களுடன் முதல்வர் ஸ்டாலின் மிகவும் ஸ்டைலாக வெள்ளை உடையுடன் இடம்பெற்றிருக்கும் இந்த வீடியோவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். மாமல்லபுரத்தில் பாரம்பரிய பரதநாட்டிய காட்சிகளும் இடம் பெற்றுள்ள இந்த டீசரை ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.

நமக்கெல்லாம் பெருமை

நமக்கெல்லாம் பெருமை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் மதிப்பிற்குரிய திரு மு.க. ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும். 44வது FIDE செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில், அதுவும் நம் தமிழகத்தில் நடைபெற இருப்பது நமக்கெல்லாம் பெருமை. அதனை எதிர்வரும் 28-ம் தேதியன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் மதிப்பிற்குரிய திரு நரேந்திர மோடிஜி அவர்கள் தொடங்கி வைக்க இருக்கிறார்கள். போட்டி குறித்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஒரு வீடியோ தயாரித்துள்ளனர். அதன் டீஸரை வெளியிடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி." என குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+