இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 16/02/2026: ஸ்டாலின் டூ வைகோ வரை! தலைவர்களின் நச் கருத்துகள்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் (Tamil Nadu Assembly Election 2026) இரு மாதங்களில் நடக்க இருக்கும் சூழலில், அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் பேச்சுகள், கருத்து மோதல்கள் என இப்போதே அரசியல் களம் அனல் பறக்க தொடங்கி விட்டது. தமிழக அரசியல் களத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கவனம் பெற்ற டாப் 10 தலைவர்களின் கருத்துகளை இங்கே சுருக்கமாக காணலாம்.
இன்றைய டாப் 10 பேச்சுக்கள் (16/02/2026) தலைவர்களின் நச் கருத்துக்கள் நறுக்கென்று உங்கள் பார்வைக்கு..

மு.க. ஸ்டாலின்
40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிக்க தடையாக உள்ள முந்தைய நிர்வாக உத்தரவை ரத்து செய்யுங்கள். நீண்ட கால விசா வழங்குதல் மீதும் மனிதாபிமான அடிப்படையில் நல்ல முடிவை எடுக்க வேண்டும்- பிரதமருக்கு கடிதம்
உதயநிதி ஸ்டாலின்
NDA கூட்டணியில் சேர்ந்த எல்லாருமே பஞ்சரான டயர்கள்.. இன்னொரு பக்கம் யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் கொள்கைனா என்னன்னே தெரியாம ஒரு கோஷ்டி சுத்திகிட்டு இருக்கு...
எடப்பாடி பழனிசாமி
அதிமுக யாருக்கும் அடிமை இல்லை. வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பது சந்தேகம். அதிமுக மீதான திமுகவின் அவதூறு பரப்புரை எடுபடாது. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. திமுக கூட்டணி தான் ஆட்டம் கண்டுள்ளது.
நயினார் நாகேந்திரன்
கரூர் கூட்டத்தில் 41 பேர் உயிரிழப்பதற்கு விஜய்யும் திமுகவும் காரணம். 12 மணிக்கு வர சொன்னால் 7 மணிக்கு வருகிறார்கள், தண்ணீர் கூட வைப்பதில்லை. விஜய்யின் அனைத்து கூட்டத்திலும் யாராவது இறப்பது அவர்களுக்கு நல்ல சகுனம் தானே. என்னை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில் யாருடைய மனமும் புண்படாதபடி பேசுபவன்..
விஜய்
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் அனைவரையும் உரிய முறையில் மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும். மனிதாபிமான முறையில் இலங்கை அரசிடம் பேசி, தாமதமின்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள், ஒன்றிய அரசை உண்மையாகவே உணர்வுப்பூர்வமாக வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
ராஜ்மோகன்
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்பதை பேசாமல் இனி யாரும் அரசியல் செய்ய முடியாது இதற்கான விதை எங்கள் தலைவர் போட்டது. எங்கள் தலைவரின் வளர்ச்சியை பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் உளறி இருக்கிறார் நயினார் நாகேந்திரன்.
சசிகாந்த் செந்தில் எம்பி
தேர்தலை நேரடியாக சந்திக்க யாருமே தயங்கவில்லை. இந்தியா முழுவதும் மிகப்பெரிய சித்தாந்த சண்டை நடந்து கொண்டிருக்கிறது. அரசியலமைப்பு சட்டமே மாற்றப்படும் நிலையில் உள்ளது.
காங்கிரஸ் கட்சியில் பவர் இருக்கிறதா.. இல்லையா என்பது மக்களுடைய முடிவு. பவர் எப்போதும் அரசியல் கட்சிகளுக்கு சொந்தமானது இல்லை. அந்த அரசியல் கட்சி என்ன செய்தது, மக்கள் மீது பாசம், நம்பிக்கையை பெற்றுள்ளதா என்பதுதான் பவரை முடிவு செய்யும். இந்தியாவில் உள்ள எல்லா ஊர்களிலும் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அப்படி எல்லா ஊர்களிலும் உள்ள காங்கிரஸ் கட்சியை பார்த்து நீங்கள் எப்படி பவர் இருக்கிறதா என்று கேட்கலாம்.
வைகோ
அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் இமயம் போல எங்கோ நிமிர்ந்திருக்க வேண்டிய நாம், படு பாதாளத்திற்கு சென்றோம். இந்த முடிவு அதனால் ஏற்பட்டது. மீண்டும் அப்படி ஒரு விமர்சனத்திற்கு போக கூடாது. 1994 வெளியேற்றப்பட்ட பிறகு நடிகர்களுக்கு வரும் கூட்டத்தை விட எனக்கு பல மடங்கு வந்தது.
இந்த தேர்தல் அக்னி பரீட்சை. எல்லா கட்சிகளிலும் இடங்கள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கிறார்கள். நாம் திமுகவுடன் பயணிக்க முடிவு எடுத்த பிறகு, ஒரு இடத்தில் கூட குந்தகம் ஏற்படுமளவுக்கு திமுகவை ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
தமிமுன் அன்சாரி
2026 தேர்தலில் பாசிச சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை பாதுகாப்பது தான் முதன்மை தேவையாக இருக்கிறது. கூட்டணி ஆட்சி, பலத்துக்கு மீறிய தொகுதிகளை கூட்டி கேட்பது போன்ற நெருக்கடிகளை ஏற்படுத்தாமல் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில் கூட்டணி கட்சிகள் இணைந்து பணியாற்ற வேண்டும்.
செல்வப்பெருந்தகை
கூட்டணி குறித்து பொது வெளியில் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை செய்ய பெங்களூர் அழைத்துள்ளது காங்கிரஸ் தலைமை. அறைக்குள் பேசுவதை பொதுவெளியில் பேசினால் என்ன செய்வது.. இத்தனை காலம் பேசாமல் இருந்துவிட்டு தேர்தல் வரும் போது பேசுவது ஏன்?, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தியைவிட யாராவது பெரியவங்க இருக்கிறார்களா என எனக்கு தெரியவில்லை. தலைமை சொல்வதை கேட்டு தான் நடந்து வருகிறேன்.
-
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
நோட்டுக்கு சீட்டு..கதர் கட்சியில் கை ஓங்கும் தலைகள்! லிஸ்டை பார்த்து கண் சிவந்த ராகுல்! பரபர டெல்லி! -
ஊதி தள்ளிடலாம் செந்தில் பாலாஜியை, "நாம 4 அடி வெச்சா திமுக 8 அடி வைக்குதே" எடப்பாடியிடம் சொன்னது யார் -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
திருமாவளவனுக்கு தெரியும்.. சீட் கொடுக்காதது பற்றி உடைத்து பேசிய ஆளூர் ஷாநவாஸ்! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
பெண்களின் திருமண வயது 21 ஆகும்.. மகளிர் அனைவருக்கு மாதம் ரூ.2000! ஆஃபர்களை அள்ளி வீசிய அன்புமணி! -
46 தனி தொகுதிகளில் நுழையும் அவர்கள் யார்? மதம் மாறியவர்களுக்கு இடமா? இந்து முன்னணி நறுக் -
தமன்னா வருவாங்களா சார்? சுந்தர்.சி களமிறக்க போகும் நட்சத்திர குரூப்! குஷ்பூவால் அடிக்கும் அதிர்ஷ்டம் -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம்












Click it and Unblock the Notifications