சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சரவெடி.. அன்பு பற்றி பேசி மனங்களைக் கவர்ந்த அப்துல் கலாமுக்கு கேகே நகரில் அரசு வீடு! தமிழக அரசு ஆணை

சிறுவன் அப்துல் கலாம் குடும்பத்துக்கு சென்னை கே.கே. நகர் சிவலிங்கபுரத்தில் தமிழக அரசு வீடு வழங்கியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: அன்பையும் மனித நேயத்தையும் பற்றி பேசிய சிறுவன் அப்துல் கலாம் குடும்பத்துக்கு சென்னை கே.கே. நகர் சிவலிங்கபுரத்தில் தமிழக அரசு வீடு வழங்கியுள்ளது. வீட்டை காலி செய்ய உரிமையாளர் கூறிய நிலையில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சிறுவன் அப்துல் கலாமுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை தரப்பட்டுள்ளது. சிறுவனின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் வீடு ஒதுக்கீடு ஆணையை தலைமைச்செயலகத்தில் வழங்கினார்.

Recommended Video

    சரவெடி.. அன்பு பற்றி பேசி மனங்களைக் கவர்ந்த அப்துல் கலாமுக்கு கேகே நகரில் அரசு வீடு! தமிழக அரசு ஆணை

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் யூட்யூப் தளம் ஒன்றில் வடசென்னைப் பகுதியைச் சேர்ந்த அப்துல் கலாம் என்று சிறுவன் பேசியிருந்தான். அந்தச் சிறுவனிடம் உனக்கு பிடிக்காதவர்கள் யார் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, எல்லாரும் உலகத்துல சமம். நம்ப யாரையும் புடிக்காதுன்னு முடிவு எடுக்க முடியாது. எல்லாரும் நம்பளை மாதிரிதான். சிலப்பேருக்கு கஷ்டம் இருக்கும் என்று சொன்னார்.

    அந்தக் கஷ்டத்தை வெளில காட்ட மாட்டாங்க. உள்ளேயே வச்சிக்கிட்டு இருப்பாங்க. யாரையும் புடிக்காதுன்னு சொல்லாதீங்க. எல்லாரும் என்னை பல்லான்னுதான் கூப்பிடுவாங்க. நான் ஏன் யாரையும் புடிக்காதுன்னு சொல்லணும்? எல்லாரும் நண்பர்கள் மாதிரிதான் என்றும் பேசினார்.

    மனிதநேயம் செத்து போச்சுங்க..ஹவுஸ்ஓனர் காலி பண்ண சொல்றார்..சிறுவன் அப்துல் தேச விரோதியா.. கதறும் தாய்மனிதநேயம் செத்து போச்சுங்க..ஹவுஸ்ஓனர் காலி பண்ண சொல்றார்..சிறுவன் அப்துல் தேச விரோதியா.. கதறும் தாய்

    சிறுவனுக்கு பாராட்டு

    சிறுவனுக்கு பாராட்டு

    ஒற்றுமை இல்லாம ஏன் இருக்கணும். நம்ம நாடு ஒற்றுமை நாடுன்னு சொல்றோம். ஒற்றுமை இல்லாம இருந்துச்சினா எப்படி? இந்தக் கருத்து எல்லோர்கிட்டயும் போய் சேரணும். அப்போதான், மனித நேயம் போய் சேரணும். மனித நேயம் இருக்கணும் என்றார். சமூக வலைத்தளங்களில் சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்தன. சிறுவனின் பேச்சு அனைவரின் மனங்களையும் கவர்ந்தது. அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது. அதனையடுத்து, பல யூட்யூப் சேனல்களும் அந்தச் சிறுவனையும் அவனது பெற்றோரையும் அழைத்து பேட்டியெடுத்தனர்.

    முதல்வர் பாராட்டு

    முதல்வர் பாராட்டு

    இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், 'அப்துல் கலாம் சிறுவனையும், அவனது பெற்றோரையும் நேரில் அழைத்துப் பாராட்டினார். இந்த சந்திப்பின் போது, சிறுவன் அப்துல் கலாமின் பெற்றோர் தங்களது வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும் படி வலியுறுத்துவதாகவும், அரசின் சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்றும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

    கலைஞர் கருணாநிதி நகரில் வீடு

    கலைஞர் கருணாநிதி நகரில் வீடு

    இந்நிலையில், அவர்களது கோரிக்கைக்கு உடனடியாக செவி சாய்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுவன் அப்துல் கலாமின் குடும்பத்திற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க அமைச்சர் தா மோ.அன்பரசனுக்கு உத்தரவிட்டார். அதனை தனது ட்விட்டர் பதிவில் தா.மோ அன்பரசன் பதிவிட்டிருந்தார். சிறுவன் அப்துல் கலாம் குடும்பத்துக்கு சென்னை கே.கே. நகர் சிவலிங்கபுரத்தில் தமிழக அரசு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று சிறுவன் அப்துல் கலாமின் குடும்பத்திற்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கீடு செய்து அதற்கான ஆணையினை சிறுவனின் பெற்றோரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.இந்நிலையில், அவர்களது கோரிக்கைக்கு உடனடியாக செவி சாய்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறுவன் அப்துல் கலாமின் குடும்பத்திற்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க அமைச்சர் தா மோ.அன்பரசனுக்கு உத்தரவிட்டார். அதனை தனது ட்விட்டர் பதிவில் தா.மோ அன்பரசன் பதிவிட்டிருந்தார். சிறுவன் அப்துல் கலாம் குடும்பத்துக்கு சென்னை கே.கே. நகர் சிவலிங்கபுரத்தில் தமிழக அரசு வீடு வழங்கியுள்ளது.

    தமிழக அரசு செய்திக்குறிப்பு

    தமிழக அரசு செய்திக்குறிப்பு

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து இணையதள தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாமின் பெற்றோருக்கு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சென்னை, கலைஞர் கருணாநிதி நகர், சிவலிங்கபுரம் திட்டப் பகுதியில் குடியிருப்பு ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

    வர்தா புயலால் இடிந்த வீடு

    வர்தா புயலால் இடிந்த வீடு

    இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதநல்லிணக்கம் குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாம், கடந்த 24-ம் தேதியன்று முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது, அம்மாணவரின் பெற்றோர் ஆ.தில்ஷாத்பேகம், அ.அஸ்மத்துல்லாஹ் ஆகியோர் தாங்கள் குடியிருந்த சென்னை, பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தில் இருந்த வீடு வர்தா புயலால் இடிந்துவிட்டதாகவும், அதனை மீண்டும் கட்டுவதற்கு தங்களிடம் போதிய பொருளாதார வசதியில்லை எனவும், எனவே குடியிருக்க வீடு ஒன்று வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.

    தமிழக அரசுக்கு நன்றி

    தமிழக அரசுக்கு நன்றி

    அப்பெற்றோரின் வேண்டுகோளை கனிவுடன் பரிசீலித்த தமிழக முதல்வர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் சென்னை, கலைஞர் கருணாநிதி நகர், சிவலிங்கபுரம் திட்டப் பகுதியில் ஒரு குடியிருப்பை ஒதுக்கீடு செய்து, அதற்கான ஆணையினை வழங்கினார். ஒதுக்கீட்டு அணையினை பெற்றுக் கொண்ட மாணவர் ஏ.அப்துல் கலாமின் பெற்றோர், தமிழக முதல்வருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வீட்டை காலி செய்ய உரிமையாளர் கூறிய நிலையில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் சிறுவன் அப்துல் கலாமுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணை தரப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் வீடு வழங்கப்பட்டதற்கு அப்துல் கலாம் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

    English summary
    The Government of Tamil Nadu has provided a house Abdul Kalam's family in Chennai KK Nagar Sivalingapuram.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X