+1,+2 மாணவர்களே பொதுத்தேர்வு அப்டேட்..செய்முறை தேர்வு மார்ச் 7 முதல் ஆரம்பம்..ரெடியாகுங்க
சென்னை: தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 7 ஆம் தேதி துவங்கி, 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செய்முறைத் தேர்வுகளை இரண்டு தேர்வுகளிலும் சேர்த்து 10 லட்சம் பேர் எழுத இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2022- 23 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த நவம்பர் மாதம் 07ம் தேதி வெளியிட்டார். அதன்படி, மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுகிறது.
11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ல் தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை பொதுத்தேர்வு. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ல் தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டுக்கான, 12ம் வகுப்பு பொது தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதனிடையே 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் கடந்த 04ம் தேதி வெளியானது. அடுத்த மாதம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 7 ஆம் தேதி துவங்கி, 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. பொதுத்தேர்வுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இந்த மாதம் 31ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. செய்முறைத் தேர்வுகளை இரண்டு தேர்வுகளிலும் சேர்த்து 10 லட்சம் பேர் எழுத இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக பிப்ரவரி மாதம் செய்முறை தேர்வுகள் முடிக்கப்பட்டு விடும் நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் செய்முறை தேர்வுகளும் பொதுத்தேர்வுகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications