சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொளுத்தும் கோடை! பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை! மாணவர்களுக்கு அமைச்சர் தந்த சர்ப்ரைஸ் அப்டேட்!

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று கொண்டு இருந்தது.

6-8 மணி நேர மின் தடை.. இருளில் மூழ்கிய வடமாநிலங்கள்.. குஜராத், உ.பி, ம.பியில் நிலைமை மோசம்.. பின்னணி6-8 மணி நேர மின் தடை.. இருளில் மூழ்கிய வடமாநிலங்கள்.. குஜராத், உ.பி, ம.பியில் நிலைமை மோசம்.. பின்னணி

சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் செயல்பட தொடங்கியது. அதன் தொடர்ந்து நேரடி தேர்வுகளும் நடைபெற்று வருகிறது.

கடும் வெயில்

கடும் வெயில்

இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து அதற்கான தேதியையும் அறிவித்தது. இந்நிலையில் கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது. பகல் நேரங்கள் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொளுத்தி வரும் நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியே கூட வருவதில்லை.

ஆல் பாஸ் கோரிக்கை

ஆல் பாஸ் கோரிக்கை

இதன் காரணமாக பள்ளிக் குழந்தைகளும் வெகுவாக பாதிக்கப்படும் நிலையில், 9 ஆம் வகு வரை உள்ள மாணவர்களை ஆல் பாஸ் செய்ய வேண்டும் எனவும், கோடை விடுமுறையை விரைவில் அறிவிக்குமாறு தமிழக அரசுக்கு பலரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதெபோல் தற்போது தமிழக அரசும் மாணவர்களும் நலனை கருத்தில் கொண்டு முன்னரே கோடை விடுமுறையை அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழகத்தில் தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க முடிவு செய்துள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தற்போது தமிழகத்தில் கோடை வெயில் அதிகமாக இருப்பதால், விடுமுறை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். மாணவர்கள் நலன் சார்ந்த முடிவு எடுக்கப்பட்டு விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்.

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

வெப்பத்தினால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு சாதகமான பதில் விரைவில் வரும். கொரோனா காலத்தில் பள்ளிகள் அதிக நாட்கள் நடக்காத நிலையில் பாடங்களை மாணவர்களுக்கு நடத்தி முடிக்க முடியாமல் உள்ளது. மேலும் சில மாநிலங்களில் கொரோனா பரவி வரும் நிலையில் மருத்துவ நிபுணர்கள் அறிவுரைப்படி பள்ளிகளை திறப்பதா அல்லது மூடுவதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்" என்றார்.

English summary
Tamil Nadu School Education Minister Anbil Mahesh poyyamozhi has said that schools in Tamil Nadu have decided to give early holidays as the impact of the heat is high at present.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X