நம்பர் 1 நாமதான்.. கர்நாடகா, மகாராஷ்டிரா, உ.பி எல்லாம் பின்னாடி.. உச்சத்தை அடைந்த தமிழ்நாடு!
சென்னை: இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புள்ளிவிவரப்படி, 2020 முதல் 2025 நிதியாண்டு வரையிலான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) அடிப்படையில் வேகமாக வளரும் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மொத்த லிஸ்டில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சிறிய மாநிலமான அசாம் முதலிடத்தில் உள்ளது.
கடந்த ஐந்து நிதியாண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் குறிப்பிட்ட சில மாநிலங்களை மட்டும் சார்ந்திருக்காமல், பல மாநிலங்களின் வலுவான பங்களிப்பால் வளர்ச்சி கண்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புள்ளிவிவரப்படி, 2020 முதல் 2025 நிதியாண்டு வரையிலான பணவீக்கச் சரிசெய்யப்பட்ட மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) கணிசமான உண்மையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தமிழ்நாடு வளர்ச்சி
இந்த மாநில அளவிலான வளர்ச்சி நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரப் போக்கிற்கு இணையாக உள்ளது. இதே காலகட்டத்தில், இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2020 நிதியாண்டில் ₹145.35 லட்சம் கோடியிலிருந்து 2025 நிதியாண்டில் ₹187.97 லட்சம் கோடியாக உயர்ந்து, ஐந்தாண்டுகளில் 29% வளர்ச்சியைப் பதிவு செய்தது. வேகமாக வளர்ந்த முதல் 10 மாநிலங்களின் பொருளாதாரம், தேசிய சராசரியை விஞ்சி 45% வரை விரிவாக்கத்தைக் கண்டுள்ளன.
அசாம் 45% வளர்ச்சியுடன் முதலிடம் பிடித்தது. இதன் GSDP ₹2.4 லட்சம் கோடியிலிருந்து ₹3.5 லட்சம் கோடியாக உயர்ந்தது. விவசாயம், எண்ணெய்-எரிவாயு, வடகிழக்கு உள்கட்டமைப்பு முதலீடுகள் அதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகள்.
தமிழ்நாடு 39% வளர்ச்சியுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றது, GSDP ₹12.4 லட்சம் கோடியிலிருந்து ₹17.3 லட்சம் கோடியாக அதிகரித்தது. வாகனங்கள், மின்னணுவியல், ஜவுளி உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் இதன் வளர்ச்சியில் பங்கு வகித்தன.
அடுத்தடுத்த இடங்களில் உள்ள மாநிலங்களில்
கர்நாடகா 36% வளர்ச்சியுடன் ₹11.5 லட்சம் கோடியிலிருந்து ₹15.7 லட்சம் கோடியாக GSDPயை உயர்த்தியது (தொழில்நுட்ப சேவைகள், புத்தொழில்கள்). உத்தரப் பிரதேசம் 35% வளர்ச்சியைப் பதிவு செய்து, GSDP ₹11.7 லட்சம் கோடியிலிருந்து ₹15.8 லட்சம் கோடியாக உயர்ந்தது (பெரிய உள்நாட்டு சந்தை, விவசாயம், தளவாடக் கட்டமைப்பு).
ராஜஸ்தான் 34% வளர்ச்சியுடன் ₹6.8 லட்சத்திலிருந்து ₹9.1 லட்சம் கோடியாகப் பொருளாதாரம் விரிவடைந்தது. சுரங்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலா மற்றும் சிமெண்ட் உற்பத்தி அதன் பொருளாதாரத்தின் முக்கிய பங்களிப்பாளர்கள்.
பின்தங்கிய மற்ற மாநிலங்கள்
பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் இரண்டும் 33% வளர்ச்சி கண்டன. பீகார் GSDP ₹4.0 லட்சம் கோடியிலிருந்து ₹5.3 லட்சம் கோடியாக வளர்ந்தது (விவசாயம், சேவைகள் உந்துதல்). ஆந்திரப் பிரதேசம் GSDP ₹6.5 லட்சம் கோடியிலிருந்து ₹8.7 லட்சம் கோடியாக விரிவடைந்தது (விவசாயம், துறைமுகங்கள், தளவாடங்கள், உணவு பதப்படுத்துதல்).
சத்தீஸ்கர், ஜார்கண்ட் தலா 31% வளர்ச்சியைப் பதிவு செய்தன. சத்தீஸ்கரின் GSDP ₹2.5 லட்சத்திலிருந்து ₹3.3 லட்சம் கோடியாக உயர்ந்தது (சுரங்கம், மின் உற்பத்தி, எஃகு). ஜார்கண்டின் பொருளாதாரம் ₹2.3 லட்சத்திலிருந்து ₹3.0 லட்சம் கோடியாக அதிகரித்தது (கனிமங்கள், கனரகத் தொழில்கள்).
தெலங்கானா 30% வளர்ச்சியுடன் முதல் பத்து மாநிலங்களின் பட்டியலை நிறைவு செய்தது. அதன் GSDP ₹6.4 லட்சம் கோடியிலிருந்து ₹8.4 லட்சம் கோடியாக உயர்ந்தது. தகவல் தொழில்நுட்பம், மருந்துகள் மற்றும் நகர்ப்புற சேவைகள் அதன் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ளன.
-
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க












Click it and Unblock the Notifications