Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜிம்மில் அசத்தும் முதல்வர் ஸ்டாலின்! டிவியில் செய்திகள் கேட்டபடி உடற்பயிற்சி! கலக்கல் வீடியோக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தனது வீட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் தீவிர உடற்பயிற்சி செய்யும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதில் எப்போதுமே மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பவர்.

தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி உள்ளிட்டவற்றைச் செய்வதை வாடிக்கையாகக் கொண்டவர். சித்தரஞ்சன் சாலைகளில் அதிகாலை நேரங்களில் நடைப்பயிற்சி செய்யும் முதல்வரைப் பார்க்கலாம்

 உடற்பயிற்சி

உடற்பயிற்சி

அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியிலும் கூட வாரத்தில் சில நாட்களாவது உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புகூட ஜிம்மில் அவர் ஓர்க் அவுட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலானது. அப்போது முதலே அவ்வப்போது அவரது ஜிம் ஓர்க் அவுட் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம்.

 சைக்கிளிங்

சைக்கிளிங்

அதேபோல சமீபத்தில் தேர்தல் பிரசார சமயத்தில்கூட சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் சைக்கிளிங் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். கண்ணாடி, ஹெல்மெட் என கலக்கலாக படுவேகமாக ஸ்டாலின் சைக்கிளிங் சென்ற அந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டது. முதல்வர் ஆன பிறகு பணிச்சுமை அதிகரித்த போதிலும், தொடர்ந்து உடற்பயிற்சி மற்றும் சைக்கிளிங் செய்வதை முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து பின்பற்றி வருகிறார்.

கலக்கல் வீடியோ

இதற்காக முதல்வர் ஸ்டாலின், தனது வீட்டிலேயே உடற்பயிற்சி கூடம் ஒன்றை அமைத்துள்ளார். நவீன உபகரணங்களுடன் அமைந்துள்ள அந்த உடற்பயிற்சி கூடத்தில் டிவியில் செய்திகளை பார்த்தவாறே உடற்பயிற்சிகளை மேற்கொள்வது முதல்வர் ஸ்டாலினுக்கு வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த ஜிம்மில் இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தை மீண்டும் கலக்கி வருகிறது.

 ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

இந்த வீடியோவை திமுக எம்பி வில்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், எம்பி வில்சன், "ஆரோக்கியமே செல்வம் என்பதைத் தொடர்ந்து கூறி வருபவர் நமது முதலமைச்சர். உடல் நலத்தை மேம்படுத்த உடற்பயிற்சி தேவை என்பதைத் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார். உடற்பயிற்சி புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும். type 2 diabetes, கேன்சர், இதய நோய்கள் ஏற்படுவதைக் குறைக்கும். உடற்பயிற்சி என்பது உடனடி மற்றும் நீண்ட கால பலன்களைத் தரும். பிஸி ஷெட்யூலுக்கு மத்தியிலும் கூட முதல்வர் ஸ்டாலின், இதை எங்குச் சென்றாலும் கவனமாகப் பின்பற்றுகிறார்!" என்று பதிவிட்டுள்ளார்.

 தொல்காப்பியர் பூங்கா

தொல்காப்பியர் பூங்கா

முதல்வர் ஸ்டாலின் ஜிம்மில் வோர்க் அவுட் செய்யும் இந்தக் கலக்கல் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. முன்னதாக சமீபத்தில் தான் முதல்வர் ஸ்டாலின் தொல்காப்பியர் பூங்காவில் வாக்கிங் சென்றார். அப்போது முதல்வர் ஸ்டாலினிடம் பொதுமக்கள் பேசிய வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+