சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதிர்பார்த்த கூட்டமில்லை.. ஆனாலும் குறையவில்லை.. வியக்க வைத்த சென்னை டாஸ்மாக் வசூல்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் டாஸ்மாக் கடை திறந்த முதல் நாளில் 20 கோடி ரூபாய் வசூல் ஈட்டியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக சென்னையில் ஒரு நாளில் 12 கோடிக்கு தான் வசூல் ஆகும்.

இந்நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு கடை திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் அதிக அளவு மது வாங்கி உள்ளது வசூல் நிலவரம் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்னையில் மார்ச் மாதத்திற்கு பின் நேற்று (ஆக.18) தான் டாஸ்மாக் மதுககடைகள் திறக்கப்பட்டது. சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 720 கடைகள் திறக்கப்பட்டது. காலை 10 முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறக்கப்பட்டிருந்தது.

சென்னை அண்ணாநகர் டாஸ்மாக் கடை அருகே போராட்டம்.. ராஜேஸ்வரி பிரியா உள்பட 15 பேர் கைது சென்னை அண்ணாநகர் டாஸ்மாக் கடை அருகே போராட்டம்.. ராஜேஸ்வரி பிரியா உள்பட 15 பேர் கைது

மது வாங்க டோக்கன்

மது வாங்க டோக்கன்

சென்னையில் டோக்கன் அடிப்படையில் மது வழங்கப்பட்டது. மைக்செட் அமைத்து தடுப்பு போட்டு , ஒவ்வொரு கடையிலும் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டு அவர்களுக்கு மது வழங்கப்பட்டது.

குவிந்த போலீஸ் படை

குவிந்த போலீஸ் படை

சென்னையில் 5 மாதங்களுக்கு பின்னர் கடைகள் திறக்கப்பட்டதால் பெரிய அளவில் கூட்டம் வரும் என்பதால் நீண்ட வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் கூட்டம் அதிகமாக வர வாய்ப்பு உள்ளதாக கருதி போலீஸ் படையும் டாஸ்மாக் முன்பு குவிக்கப்பட்டது. பலர் காலை 8 மணிக்கே மதுவாங்க கடை முன்பாக நின்று இருந்தார்கள். சென்னை மயிலாப்பூரில் நீண்ட வரிசையில் நின்று டோக்கன் பெற்று குடிமகன்கள் மதுபானங்களை வாங்கினர்.

சமூக இடைவெளி இல்லை

சமூக இடைவெளி இல்லை

இதேபோல் பல இடங்களிலும் மதியத்திற்கு பிறகு கூட்டம் அதிகமாக இருந்தது. மாலையில் கூட்டம் வெகுவாகவே இருந்தது. கூட்டம் அதிகமாக இருந்த கடைகளில் இரண்டு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டது. திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயப்ப்டடை, சேப்பாக்கம், வண்ணாரப்பேட்டை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் குடிமகன்கள் மதுக்கடைகள் முன்பு குவிந்தனர். சமூக இடைவெளியை பின்பற்றாமல் சரக்கு வாங்கி சென்றதை காண முடிந்தது.

20 கோடிக்கு மதுவிற்பனை

20 கோடிக்கு மதுவிற்பனை

கூட்டம் எதிர்பார்த்த அளவு இல்லைஎன்கிற போதிலும் மதுவிற்பனை அமோகமாகவே இருந்துள்ளது. சென்னையில் வழக்கமாக 12 கோடிக்கு தினமும் மதுவிற்பனையாகும் என்றால், வார இறுதியில் 15 கோடிக்கு மது விற்பனையாகும். ஆனால் 5 மாதங்களுக்கு பின் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மதுவிற்பனை அதிகமாக இருந்தது. நேற்று ஒரே நாளில் 20 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.

Recommended Video

    August 17 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் E-Pass- முதல்வர் அதிரடி | OneindiaTamil
    வார இறுதியில்

    வார இறுதியில்

    வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதால் சனிக்கிழமை அன்று கூட்டம் அதிகரிக்கும். எனவே அப்போது மதுவிற்பனை இதை விட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுக்கடைகள் 5 மாதத்திற்கு பிறகு திறக்கப்பட்ட காரணத்தால் நேற்று பல குடிமகன்கள் சென்னையில் மதுபோதையில் உற்சாகமாக சுற்றினர்.

    English summary
    Rs.20 crore of Tasmac day one sales in Chennai market after reopening. On an average the Chennai market brings in Rs 12 crore (during week days) to Rs 15 crore (during weekends) per day to the state coffers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X