சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மது இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலையை உருவாக்கி விட்டனர்".. பாமக அன்புமணி ராமதாஸ் அட்டாக்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் எங்கும் போதைப்பொருள் எளிதாக கிடைப்பதாகவும், மது இல்லாமல் இருக்க முடியாது என்றதொரு நிலைக்கு தமிழகம் வந்ததற்கு திராவிடல் மாடல் ஆட்சியே காரணம் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நடந்த இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று பண்ருட்டி அருகே நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி, தேசிங்கு நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

ஸ்கூல் போற பொண்ணுங்க 'குடிக்கிறாங்க’.. நாடு எங்க போகுது! இழுத்து மூடுங்க - 'லிஸ்டு’ போட்ட அன்புமணி ஸ்கூல் போற பொண்ணுங்க 'குடிக்கிறாங்க’.. நாடு எங்க போகுது! இழுத்து மூடுங்க - 'லிஸ்டு’ போட்ட அன்புமணி

மது பழக்கம்

மது பழக்கம்

தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்த தலைமுறையினர் மது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களால் மது இன்றி இருக்க முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. அடுத்த தலைமுறையை நாம் காப்பாறி ஆக வேண்டும். மது இல்லாமல் இருக்கு முடியாத என்ற நிலையை உருவாக்கியது தான் திராவிட மாடல். இந்த தலைமுறையினரை போதை, சூது மற்றும் மது பழக்கத்தில் இருந்து காப்பாற்ற முடியாது.

போதைப்பொருள் புழக்கம்

போதைப்பொருள் புழக்கம்

அடுத்த தலைமுறையை நாம் காக்க வேண்டும். எங்கு பார்த்தாலும் எளிதில் போதைப்பொருட்கள் கிடைக்கிறது. கஞ்சாவும் சாக்லேட் வடிவில் கிடைக்கிறது, பொட்டலமாக கிடைக்கிறது. இதேபோல் பேப்பராகவும் ஸ்டாம்பாகவும் கஞ்சா கிடைக்கிறது. போதைப்பொருட்களான அபின், கோகைன், ஹெராயின் என இங்கே அனைத்து வகை போதைப்பொருளும் சரளமாக கிடைக்கிறது.

 கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை

இவ்வாறு போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருவதை தடுக்க இதற்கென ஒரு அமைப்பு தனியாக இருக்கிறது. ஆனால் அதில் அதிகளவில் காவலர்கள் இல்லை. இதுபோன்ற போதை தடுப்பில் புதியதாக 20 ஆயிரம் காவலர்களை நியமித்து அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் போதைப்புழக்கம் கட்டுப்படுத்தப்படும். ஆனால் இப்போது வெறும் 800 காவலர்களோ அல்லது 500 காவலர்களோ தான் இருக்கிறார்கள்.

 குண்டர் சட்டத்தில்

குண்டர் சட்டத்தில்

அதிக காவலர்களை நியமித்து போதை தடுப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மேலும் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். குறிப்பாக போதைப்பொருள் எங்கிருந்து கிடைக்கிறது என்பதை போலீசார் கண்டறிய வேண்டும். அதை கண்டறிவதோடு, போதைப்பொருளை பரப்ப மூலகாரணமாக இருக்கும் இடங்களை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வைரஸ் காய்ச்சல்

வைரஸ் காய்ச்சல்

தற்போது தமிழகத்தில் எச்.1 வைரஸ், இன்புளுயன்சா வைரஸ் காரணமாக மக்களிடையே காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. எனவே இதை கருத்தில் கொண்டு அதிக நோய் தாக்கம் இருக்கும் இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடலாம். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்க தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

English summary
Patali Makkal Party president Anbumani Ramadoss has said that Dravidal model rule is the reason why Tamil Nadu has come to a state where drugs are easily available everywhere and alcohol cannot exist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X