நல்ல வாய்ப்பு.. தவறவிட்ட அஞ்சல் துறை.. வணிகர்கள், பொதுமக்களுக்கு பெரும் நன்மை தரும் வாய்ப்பு
சென்னை: இன்றைக்கு அமேசான் செய்து கொண்டிருப்பதை அஞ்சல் துறை செய்திருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக அதன் கைகள் கட்டிப்போடப்பட்டுள்ளது. அமேசான், ப்ளிப்கார்ட், ஜியோ என இன்னும் எத்தனையே ஆன்லைன் நிறுவனங்கள் டெலிவரிக்கு போக முடியாத இடங்களில் எல்லாம் அஞ்சல் துறையால் போக முடியும்.
ஆனால் அஞ்சல் துறை மூலம் பொருட்களை வியாபாரிகளிடம் இருந்து ஒருங்கிணைத்து ஒரு தளத்தை உருவாக்கி லாபம் முழுவதும் நம் வியாபாரிகளுக்கும், நம் அரசுக்கும் செல்வதற்கான திட்டங்கள் ஏற்படுத்தப்படவில்லை.
எல்லாமே ஆன்லைன் என்று வந்த பின்னர், அஞ்சல் துறையை பலப்படுத்தி அதன் மூலம் வியாபாரிகள், பொதுமக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நோக்கி அரசு நகருவது தானே நலம்.

சேவை மனப்பான்மை
எத்தனையோ கொரியர்கள் வந்துவிட்டன. எத்தனையோ ஆனலைன் ஷாப்பிங் நிறுவனங்கள் வந்துவிட்டன. ஏன் எத்தனையோ வங்கிகள் வந்துவிட்டன. அத்தனையும் சேவை மனப்பான்மையுடனான தொழில் செய்கின்றன. அவர்கள் லாபம் ஒன்றே அவர்கள் இலக்கு. அதில் தவறு ஒன்றும் இல்லை. அதற்கு தான் சேவை துறையில் தடம் பதித்துள்ளன. ஆனால் அஞ்சல் துறை மட்டுமே சேவை மனப்பான்மையுடனும், அர்பணிப்புடன் செயல்படுகிறது.

தனியார் துறை வித்தியாசம்
தனியாருக்கும், அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை இங்கு புரிந்து கொள்ள வேண்டும். 10 பேர் கூட கொரியர் அனுப்பாத ஊருக்கு கொரியர் நிறுவனங்கள் கடை போட மாட்டார்கள். பல ஆயிரம் பேர்வங்கி கணக்கு தொடங்காத ஊரில், தனியார் வங்கிகள் தொடங்கப்படாது. ஆனால் இவை இரண்டையும் அஞ்சல்துறை செய்து வருகிறது. அடிப்படையில் அஞ்சல் துறையை பலப்படுத்தி இருந்தால், இன்றைக்கு இந்தியாவின் பல லட்சம் கோடி பணம், குறிப்பிட்ட சில நிறுவனங்களின் கைக்களில் சேர்ந்திருக்காது. மாறாக மக்களின் கைகளுக்கே வந்துசேர்ந்திருக்கும்.

கொரியர் லாபங்கள்
ஒரு நாளைக்கு ஒரு மாவட்டத்திற்கு 500 முதல் 1000 பார்சல் ஆன்லைன் ஆர்டர் மூலம் டெலிவரி ஆகிறது என்று வைத்துக்கொண்டால், தமிழகம் முழுவதும் எத்தனை ஆர்டர்கள், இந்தியா முழுவதும் எத்தனை ஆர்டர்கள், எத்தனை லட்சம் டெலிவரி என்று யோசித்து பாருங்கள். ஒரு டெலிவரிக்கு 30 ரூபாய் என்று வைத்தால் கூட பல ஆயிரம் கோடியை தொடும். ஆன்லைன் நிறுவனங்களின் லாபம் தனி கணக்கு.

வணிகர்கள் வாழ்வாதாரம்
ஆன்லைன் நிறுவனங்களைப் போல் அஞ்சல் துறை இந்த சேவையை செய்திருந்தால் அந்தந்த மாவட்டங்களின் உள்ளூர் வியாபரிகளின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்து திட்டங்களை உருவாக்கி வணிகர்களை காப்பாற்ற முடியும். அத்துடன் மக்களுக்கும் பொருட்களின் விலையும் நியாயமாக கிடைக்கும். அஞ்சல்துறையால் ஆன்லைன் தள சேவையை சிறப்பாக செய்யவும் முடியும்.

வணிக சந்தை
அஞ்சல்துறையில் கணக்கு இருந்தால் போதும் அவர்கள் எந்த பொருளையும் எங்கிருந்தும் ஆன்லைனிலோ அல்லது அஞ்சலக அலுவலகத்திலோ ஆர்டர் செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்கினால், நிச்சயம் அஞ்சல் துறையில் பல லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாகும். இதில் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் இயங்கினால் மிகப்பெரிய வணிக சந்தையை அஞ்சல்துறையால் கைப்பற்ற முடியும். மக்களுக்கு நியாயமான சேவையும் கிடைக்கும்.

தடுமாற்றம்
ஆனால் துரதிஷ்டவசமாக இங்கே ஆன்லைன் தளங்களால் வியாபாரிகளின் வியாபாரம் அழிக்கப்படுவது ஒருபுறம் எனில், எந்த ஒழுங்குமுறையும் இல்லாமல் மிக மோசமான தள்ளுபடிகளை அளித்து மக்களை கவர்வதால் உள்ளூர் வியாபாரிகள் போட்டியை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். எனவே அமோசன் , ப்ளிப்கார்டின் வேலையை நமது அஞ்சல்துறை செய்ய தொடங்கினால், புதிய மாற்றம் உருவாகும். குறிப்பிட்ட சிலருக்கே லாபம் போவது தடுக்கப்படும்.குறிப்பிட்ட சிலரே வணிக போட்டியாளராக உருவெடுப்பது தடுக்கப்படும். அனைவருக்குமான சமமான வாய்ப்பு கிடைக்கும். இது யோசனை மட்டுமே.. ஆனால் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அரசு.. இதை ஏற்குமா என்பது கடினம் தான்..!
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications