வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி
சென்னை: பரங்கிமலை - சென்னை கடற்கரை வழித்தடத்தில் வேளச்சேரி வரை தான் ரயில்கள் இயங்கி வந்தன. இப்போது பரங்கிமலை வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 2009ல் ஆரம்பித்த திட்டம் செயல்பாட்டில் முழுமை பெற சுமார் 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. இது போன்ற பெரிய திட்டங்கள் திறக்கப்படும்போது ஒரு தரப்பு "நாங்கள் தான் செய்தோம்" என்று உரிமை கொண்டாட முயல்வதும், மற்றொரு தரப்பு அதைத் தடுக்க முயல்வதும் இயல்பு. இவ்வளவு பெரிய திட்டத்தை எந்தவித ஆரவாரமும் இன்றி "சைலண்ட்" ஆகத் திறந்ததன் பின்னணி தேர்தல் நேரத்தில் மிகவும் சுவராஸ்மானது.
இந்தியாவில் ஒரு பெரிய ரயில்வே திட்டம் அல்லது புதிய வழித்தடம் தொடங்கப்படும்போது, பெரிய அளவிலான விழாக்கள், கொடியேற்றங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் உரைகள் இடம்பெறுவது வழக்கமாக இருக்கிறது. அந்த ஊர் கவுன்சிலர் தொடங்கி, எம்எல்ஏ, எம்பி, நகராட்சி தலைவர், மேயர், அமைச்சர், முதல்வர், பிரதமர் வரை பங்கு பெறுவார்கள். ஆனால் பரங்கிமலை - வேளச்சேரி பறக்கும் ரயில் இணைப்பு என்பது சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கக்கூடிய மிக முக்கியமான திட்டமாகும். மொத்த சென்னைக்குமே மிகப்பெரிய வரப்பிரசாதமான திட்டம். இவ்வளவு பெரிய திட்டம் ஆரவாரமின்றி, சாதாரணமாகத் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அனேகமாக நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இப்படியான சூழலில் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பரங்கிமலை - வேளச்சேரி பறக்கும் ரயில் இணைப்பு மக்கள் பயன்பாட்டிற்கு உடனே திறக்கப்பட்டுள்ளது. இது பல ஆண்டுகளாக காத்திருப்புக்கு பின் உருவான திட்டம் என்பதால், மக்கள் பயன்பாட்டிற்கு முன்னுரிமை அளித்து, விழாக்களைத் தவிர்த்துவிட்டு உடனடியாக சேவையைத் தொடங்குவது நிர்வாக ரீதியான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
ரயில்வே அமைச்சகம் சாதாரணமாக இன்று சாதாரணமாக ரயில் சேவை தொடங்க காரணம், இந்தத் திட்டம் பல ஆண்டுகள் தாமதமான ஒன்று என்பதுடன், மேலும் தாமதிக்காமல் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இது செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது, அதேநேரம் நீண்ட காலத் தாமதத்திற்குப் பிறகு, மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், விழாவைத் தவிர்த்துவிட்டுப் பணியை மட்டும் தொடங்கியதாக விமர்சனங்கள் உள்ளது.
அதேநேரம் எந்த விளம்பரமும் அறிவிப்பும் இன்றி பரங்கிமலை - வேளச்சேரி பறக்கும் ரயில் இணைப்பு திறக்கப்பட்டது ஆளும் திமுகவிற்கு மிகப்பெரிய ட்விஸ்ட் ஆகபார்க்கப்படுகிறது.ஏனெனில் விழா நடைபெறவில்லை.. யாரையும் அழைக்கவில்லை. பிரதமர், முதல்வர் வந்து திறக்கக வேண்டிய திட்டம் சட்டென எந்த அறிவிப்பும் இல்லாமல் திறந்ததை திமுக திகைப்புடனே பார்க்கிறதாம்.
மேலும் தேர்தல் நேரம் என்பதால், ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் "கிரெடிட்" சென்றுவிடக்கூடாது என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவாக இது இருக்குமா என்ற சந்தேகமும் எழுப்புகிறார்கள் ஆளும் கட்சி தொண்டர்கள். இந்தத் திட்டம் ரயில்வே (மத்திய அரசு) மற்றும் மாநில அரசு ஆகிய இரு தரப்பும் சம்பந்தப்பட்டது என்பதால், இருவருக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படாதது காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அண்மையில் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டதை, தங்களால் நடந்ததாக திமுக, கம்யூனிஸ்ட்டுகள் கூறி வருகின்றன. இந்த சூழலில் யாரையும் அழைக்காமல், சத்தமே இல்லாமல் பரங்கிமலை - வேளச்சேரி பறக்கும் ரயில் இணைப்பு திறக்கப்பட்டிருப்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications