சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திருவாரூரில் திமுகவிற்கு முழு ஆதரவு.. வைகோ அதிரடி.. புதிய பலம் பெறும் திமுக!

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    விருப்ப மனு வினியோகம் ஆரம்பம்... திருவாரூரை குறிவைக்கும் திமுக- வீடியோ

    சென்னை: திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

    திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் விருப்ப மனுக்களை அளிக்க தொடங்கி உள்ளது.

    Thiruvarur by-election : Vaiko decides to support DMK candidate in the poll

    திருவாரூர் தேர்தலில் போட்டியிட விரும்பும் உறுப்பினர்கள் இந்த விருப்ப மனுக்களை பெற்று கட்சி தலைமையிடம் அளிக்கலாம். திமுக இந்த தேர்தலுக்காக தீவிரமாக செயலில் இறங்கி உள்ளது.

    இந்த நிலையில் திமுகவிற்கு ஆதரவாக மதிமுக களமிறங்கி உள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்தார்.

    அதில், 2004 தேர்தலை போல இடைத்தேர்தலிலும் திமுக வெற்றிபெறும். திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளிக்கும்.

    திமுக நிறுத்தும் வேட்பாளருக்கு முழு ஆதரவு அளிக்கப்படும். திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மதிமுக உறுப்பினர்கள் பிரச்சாரம் செய்வார்கள். திமுக கூட்டணிதான் இந்த தேர்தலில் வெற்றிபெறும், என்று கூறியுள்ளார்.

    ஏற்கனவே திமுகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளித்துள்ளது. அதேபோல் கூட்டணி தர்மப்படி திமுகவிற்கு ஆதரவு அளிப்போம் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். இதனால் திமுகவின் பலம் அதிகம் ஆகியுள்ளது.

    வரும் ஜனவரி 28-ம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும். ஜனவரி 31-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Thiruvarur by-election 2019: MDMK General Secretary Vaiko decides to support DMK candidate in the poll.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X