அதிகாலை 4 மணிக்கு சஹர்... 18வது ஆண்டாக ரமலான் நோன்பு இருக்கும் தொல். திருமாவளவன்
18ஆம் ஆண்டாக இன்று முதல் நோன்பு மேற்கொள்கிறேன். நோன்புக்காக இன்று அதிகாலை 4 மணிக்கு சஹர் நிகழ்ச்சியில் பங்கேற்றேன் என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தொல். திருமாவளவன்.
சென்னை: ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களை போன்று 18வது ஆண்டாக நோன்பு இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 3 நாட்கள் மட்டும் நோன்பு இருப்பது திருமாவளவன் வழக்கம். இந்தாண்டுக்கான நோன்பை இன்று திருமாவளவன் தொடங்கியுள்ளார். நோன்புக்காக இன்று அதிகாலை 4 மணிக்கு சஹர் நிகழ்ச்சியில் பங்கேற்றதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது அவர் நோன்பிருக்கும் 18வது ஆண்டாகும். இஸ்லாமிய உலமாக்களுடன் சேர்ந்து தனது நோன்பை துவக்கியுள்ளார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்.

இதனை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள தொல். திருமாவளவன், 18ஆம் ஆண்டாக இன்று முதல் நோன்பு மேற்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். நோன்புக்காக இன்று அதிகாலை 4 மணிக்கு சஹர் நிகழ்ச்சியில் பங்கேற்றேன் என்று தனது ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார் தொல். திருமாவளவன்.

நோன்பு வைக்கும் முஸ்லிம்களை அழைத்து, இப்தார் விருந்து கொடுத்து வருபவர் தொல். திருமாவளவன். அத்தகைய விருந்தில் நோன்பாளிகளுடன் பங்கேற்கும் அவரும் நோன்பிருந்து வருகிறார். 18 ஆண்டுகளாக நோன்பைக் கடைபிடித்து வரும் அவர், தன் சகாக்களையும் நோன்பிருக்க சொல்லி வருகிறார்.

இஸ்லாம் வலியுறுத்தும் நோன்பு என்பது, மதக்கடமை என்பதையும் தாண்டி அறிவியல் பூர்வமான உண்மை. ஆண்டுக்கு ஒரு மாதம் வயிற்றுக்கும், செரிமான உறுப்புகளுக்கும் ஒய்வு கொடுக்கும் அருமையான செயல்பாடு என்றும், நோன்பு இருப்பதனால் உடலில் மிகப்பெரும் மாற்றத்தை உணர்வதாகவும் தன் அனுபவத்தை சொல்கிறார். எத்தனையோ மதங்கள் நோன்பை வலியுறுத்தினாலும், இஸ்லாம் கூறும் நோன்பில் ஓர் ஒழுங்கும், கால வரையறையும், கட்டுப்பாடும் இருப்பதனால் இந்த நோன்பை தான் கடைபிடிப்பதாக கூறுகிறார். திருமாவளவன்.












Click it and Unblock the Notifications