10, +1,+2 மாணவர்களே பொதுத்தேர்வுக்கு ரெடியாகுங்கள்.. எந்த நாளில் எந்த தேர்வு - முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று
வெளியிட்டார் . 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ல் தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை பொதுத்தேர்வு. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ல் தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை பொதுத்தேர்வு. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ல் தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு அட்டவணையை இன்று வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 13ல் தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறும். 12ம் வகுப்பு தேர்வை சுமார் 8.8 லட்சம் மாணவ, மாணவியர் எழுத்தவுள்ளனர். 3,169 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. மாணவர்களுக்கு பெற்றோர்கள் எந்த வித அழுத்தமும் தரக்கூடாது என்று கூறினார்.

TN 10th,11th plus Two public exam 2023 : Check the full Time table

பிளஸ் 2 பொதுத் தேர்வு அட்டவணை

  • மார்ச் 13, 2023 திங்கட்கிழமை - மொழித்தாள்
  • மார்ச் 15, 2023 புதன்கிழமை - ஆங்கிலம்
  • மார்ச் 17, 2023 வெள்ளிக்கிழமை - கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஸ், எதிக்ஸ் அன்ட் இன்டியன் கல்ட்ச்சர்,கம்ப்யூட்டர் சயின்ஸ், ஹோம் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், பயோ கெமிஸ்ட்ரி,பொலிடிக்கல் சயின்ஸ், புள்ளியியல், நர்ஸிங் வொகேசனல், பேசிக் எலட்க்ரிகல் இஞ்சினியரிங்
  • மார்ச் 21, 2023 செவ்வாய்க்கிழமை - பிசிக்ஸ், எகனாமிக்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி
  • மார்ச் 27,2023 திங்கட்கிழமை - கணக்கு, விலங்கியல், காமர்ஸ், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசன் அன்ட் டயடிக்ஸ், டெக்ஸ்டைல் அன் டிரஸ் டிசைனிங், ஃபுட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட், அக்ரிகல்சுரல் சயின்ஸ், நர்ஸிங்
  • மார்ச் 31, 2023 வெள்ளிக்கிழமை - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இஞ்சினியரிங், பேசிக் சிவில் இஞ்சினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இஞ்சினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இஞ்சினியரிங்,டெக்ஸ்டைல் டெக்னாலஜி, ஆபிஸ் மேனேஜ்மென்ட் செக்ரட்டரிஷிப்
  • ஏப்ரல் 03, 2023 திங்கட்கிழமை - வேதியியல், அக்கவுண்டன்ஸி, ஜியாகிரபி

11ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி தேதியன்று முடிவடையும். 11ம் வகுப்பு பொதுத்தேர்வை 8.50 லட்சம் பேர் எழுத உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

+1 பொதுத் தேர்வு 2023 அட்டவணை

  • மார்ச் 14, 2023 - செவ்வாய்கிழமை - மொழித்தாள்
  • மார்ச் 16, 2023 - வியாழக்கிழமை - ஆங்கிலம்
  • மார்ச் 20, 2023 திங்கட்கிழமை - பிசிக்ஸ், எகனாமிக்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி
  • மார்ச் 24, 2023 வெள்ளிக்கிழமை - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இஞ்சினியரிங், பேசிக் சிவில் இஞ்சினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இஞ்சினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இஞ்சினியரிங்,டெக்ஸ்டைல் டெக்னாலஜி, ஆபிஸ் மேனேஜ்மென்ட் செக்ரட்டரிஷிப் மார்ச் 28, 2023 செவ்வாய்க்கிழமை - வேதியியல், அக்கவுண்டன்ஸி, ஜியாகிரபி
  • மார்ச் 30, 2023 வெள்ளிக்கிழமை - கம்யூனிக்கேட்டிவ் இங்கிலீஸ், எதிக்ஸ் அன்ட் இன்டியன் கல்ட்ச்சர், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஹோம் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேசன், பயோ கெமிஸ்ட்ரி,பொலிடிக்கல் சயின்ஸ், புள்ளியியல், நர்ஸிங் வொகேசனல், பேசிக் எலட்க்ரிகல் இஞ்சினியரிங்
  • ஏப்ரல் 05,2023 திங்கட்கிழமை - கணக்கு, விலங்கியல், காமர்ஸ், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசன் அன்ட் டயடிக்ஸ், டெக்ஸ்டைல் அன் டிரஸ் டிசைனிங், ஃபுட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட், அக்ரிகல்சுரல் சயின்ஸ், நர்ஸிங்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 10 லட்சம் மாணவ மாணவியர் எழுதவுள்ளனர். 3,986 மையங்களில் தேர்வு நடைபெறும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2023 - அட்டவணை

TN 10th,11th plus Two public exam 2023 : Check the full Time table
  • ஏப்ரல் 06, 2023 வியாழக்கிழமை - மொழித்தாள்
  • ஏப்ரல் 10, 2023, திங்கட்கிழமை - ஆங்கிலம்
  • ஏப்ரல் 13, 2023 வியாழக்கிழமை - கணிதம்
  • ஏப்ரல் 15, 2023 சனிக்கிழமை - விருப்ப மொழி
  • ஏப்ரல் 17, 2023 திங்கட்கிழமை - அறிவியல்
  • ஏப்ரல் 20,2023 வியாழக்கிழமை - சமூக அறிவியல்
TN 10th,11th plus Two public exam 2023 : Check the full Time table

மாணவர்கள் அனைவரும் முழு கவனத்துடன் பொதுத்தேர்வுகளுக்கு தயாராக வேண்டும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+