“டைம் ஸ்டார்ட்” - 2 முடிவுகள்.. தொடங்கும் சட்டப்பேரவை தொடர்! நிறைவேறும் பல நாள் எதிர்பார்ப்பு
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று கூட இருக்கும் சூழலில் தமிழ்நாடு மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய முடிவுடன் 2 முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.
கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கி மே 10ஆம் தேதி வரை நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.
சட்டப்பேரவை கூட்டத்தொடரை 6 மாதங்களுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும் என்ற விதி இருக்கும் நிலையில் இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

இன்று சட்டப்பேரவைக் கூட்டம்
இன்று மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா உட்பட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்று அதில் எத்தனை நாட்கள் கூட்டத் தொடரை நடத்தலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

துணை நிதிநிலை அறிக்கை
மேலும் இந்த கூட்டத்தொடரில் துணை நிதிநிலை அறிக்கையும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த கூட்டத்தொடரில் இதில் எடுக்கப்பட்ட வேண்டிய முக்கிய முடிவுகள், நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள், எதிர்க்கட்சிகளின் தாக்குதல்கள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 14 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை மேற்கொண்டார்.

ஆன்லைன் ரம்மி தடை
சமீபத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட மக்களை ஏமாற்றும், தற்கொலைக்கு தூண்டும் இணையதள விளையாட்டுக்களுக்கு தடை விதிக்க வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்த நிலையில், அதற்கு நிரந்தர தீர்வு வழங்குவதற்கான மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனவே அந்த மசோதா இதில் தாக்கல் செய்யப்படுகிறது.

வெளிநாட்டு முதலீடுகள்
அதேபோல் தமிழ்நாட்டுக்கு அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர். இதன் விளைவாக பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முடிவு செய்துள்ளன. இதற்கான அனுமதி வழங்குவது, தொழிலை விரிவாக்கம் செய்வது, சலுகை வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications