மார்ச் 18க்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. காக்க வைக்கப்படும் திருமாவளவன்.. பின்னணி என்ன?
சென்னை: மார்ச் 18ஆம் தேதிக்குள் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய திமுக தலைமை முடிவு எடுத்துள்ளது. முதற்கட்டமாக குறைந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட கட்சிகளுடன் ஒப்பந்தத்தை நிறைவு செய்துவிடலாம் என்றும், கடைசி நாளில் விசிக மற்றும் தேமுதிக உடனான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு கொள்ளலாம் என்றும் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில், திமுக தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மார்ச் 18ஆம் தேதி திமுக தலைமை தரப்பில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடலாம் என்று திட்டமிட்டுள்ளது. அதற்குள் தொகுதி பங்கீட்டை முடிக்க திமுக சீனியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக திடீரென மதிமுகவுடன் தொகுதி பங்கீட்டை முடித்தது. 4 தொகுதிகள், உதயசூரியன் சின்னம் என்று நேரடியாக திமுக கூறிவிட்ட சூழலில், துரை வைகோவின் பிடிவாதம் காரணமாக ஒரே ஒரு தொகுதியில் மட்டும் சொந்த சின்னத்தில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. அதேபோல் மதிமுக உடனான தொகுதி பங்கீடு முடிவடைந்த பின், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.
அத்தனை கட்சிகளிடமும் ஒரு தொகுதி குறைக்கப்பட்டு சூழலில், சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய இரு கட்சிகளுக்கும் 5 தொகுதிகள் ஒதுக்க திமுக தலைமை ஆலோசித்திருக்கிறது. இதற்கு ஒரு கட்டத்தில் சிபிஐ இறங்கி வர, திடீரென சிபிஎம் நீங்கள் போனால் எங்களையும் அதே தொகுதி எண்ணிக்கைக்கு தள்ளிவிடுவார்கள் என்று தடுத்திருக்கிறது. இதனால் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்திற்கு நகராமல் உள்ளது.
ஆனால் விசிகவுக்கு இம்முறை கூடுதல் தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார். ஆனால் எத்தனை தொகுதிகள் என்பதை வெளிப்படையாக சொல்லாததால், திருமாவளவன் யாருடனும் ஆலோசிக்காமல் அமைதி காப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் விசிகவிடம் தொகுதிகளை குறைத்து கொள்ளுங்கள் என்று திமுக பேச்சுவார்த்தைக் குழு இதுவரை பேச்சை எடுக்கவில்லை.
அந்தப் பக்கம் திமுக கூட்டணியில் 3வது பெரிய கட்சியாக நாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தேமுதிகவுக்கு உள்ளது. இதனால் விசிகவை விட ஒரு தொகுதி கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்பதில் பிரேமலதா விஜயகாந்த் பிடிவாதமாக இருக்கிறாராம். இதன் காரணமாகவே இந்த இரு கட்சிகளையும் கடைசி நேரத்தில் அழைத்து கொள்ளலாம் என்று திமுக தலைமை கருதுவதாக அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.
-
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
திருமாவுக்கு பதில் மாஜி காங். தலைவரின் மகன் போட்டி.. காட்டுமன்னார் கோவில் வேட்பாளர் ஜோதிமணி யார்? -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
தமிழக அரசியலுக்கு திருமாவளவன் திரும்பியது ஏன்? உளவுத்துறை எடுத்த நோட்ஸ்.. கசிந்த சீக்ரெட்? -
வேட்பு மனு தாக்கலின்போதே திமுக தவெக கட்சியினர் மோதல்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு! -
“துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா?” போட்டியிட மறுத்ததற்கு காரணம் இதுதான்! திருமாவளவன் விளக்கம் -
3 எம்பிக்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.. பின்னணி












Click it and Unblock the Notifications