சொந்த சின்னத்தில் போட்டியிட மதிமுக முடிவு.. தொகுதி எண்ணிக்கையை குறைக்க தயாரான திமுக!
சென்னை: திமுக கூட்டணியில் முக்கிய அங்கமாக இருந்து வரும் மதிமுக சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதனை திமுக தொகுதி பங்கீடு குழுவிடம் கூறிய போது, சொந்த சின்னத்தில் போட்டியிட முடிவு செய்தால், 4 தொகுதிகளுக்கு மேல் எதிர்பார்க்காதீர்கள் என்று சொல்லிவிட்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
பிப்ரவரி 22ஆம் தேதி முதல் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சிபிஎம், சிபிஐ, கொமதேக உள்ளிட்ட கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கிறது. இந்த முறை தேமுதிக, மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை, தமீமுன் அன்சாரி, தனியரசு உள்ளிட்டோரும் இணைந்திருக்கின்றனர்.

இதனால் ஏற்கனவே கூட்டணியில் உள்ள சில கட்சிகளுக்கு தொகுதிகளை குறைக்க திமுக தலைமை முடிவு செய்திருக்கிறது. இந்த நிலையில் மதிமுக தரப்பில் சில நாட்களுக்கு முன்பாக திமுக தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4ல் வென்றோம் என்று மதிமுக பேச்சை தொடங்கி இருக்கிறது.
அதனால் இம்முறை 12 தொகுதிகளை கேட்டால், 8 தொகுதிகள் வரை போட்டியிடலாம் என்று ஆரம்பித்துள்ளனர். ஆனால் திமுக தொகுதி பங்கீடு குழுவோ 6 தொகுதிகளுக்கே நெருக்கடி இருப்பதன் காரணமாக 4 தொகுதிகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். இதனால் மிரண்டு போன மதிமுக நிர்வாகிகள், தொகுதிகள் அதிகரிக்கப்படவில்லை என்றாலும் பரவாயில்லை..
6ல் இருந்து எண்ணிக்கையை குறைத்துவிட வேண்டாம் என்று கூறிவிட்டு வந்துள்ளனர். இதனால் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் திமுக - மதிமுக இடையிலான தொகுதி பங்கீடு நிறைவுக்கு வரும் என்று கருதப்படுகிறது. இதனிடையே திமுகவிடம் மதிமுக சொந்த சின்னத்தில் போட்டியிட ஆர்வம் காட்டி இருக்கின்றனர். கடந்த முறை மதிமுக வென்ற 4 எம்எல்ஏ-க்களும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள்.
கடந்த லோக்சபா தேர்தலில் துரை வைகோ தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். இதனால் இம்முறை சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் மதிமுக தீவிரம் காட்டி இருக்கிறது. மதிமுக சொந்த சின்னம் என்பதில் பிடிவாதம் காட்டினால், திமுக தொகுதி எண்ணிக்கையை குறைக்கும் முடிவில் இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
-
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை வாகனத்தை நெருங்கி வந்த போலீசார்.. திடீரென ரெய்டு! ராமநாதபுரத்தில் சலசலப்பு -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
சென்னையில் 13 தொகுதிகளில் 'திமுக' வெல்லும் ! - வாயை விட்ட ஆதவ் அர்ஜூனா! என்னங்க நடக்குது? -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
வேட்பு மனு தாக்கலின்போதே திமுக தவெக கட்சியினர் மோதல்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு! -
மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மீது அதிருப்தி.. சுயேச்சையாக போட்டியிடும் முக்கிய நிர்வாகி -
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட் -
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன?












Click it and Unblock the Notifications