20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்!
சென்னை: சட்டசபைத் தேர்தல் நெருங்கும் போது அதிருப்தி இருக்கும் நிர்வாகிகளுடன் பேசி ஒவ்வொரு கட்சியும் எதிர்முகாமில் இருக்கும் பிரபலங்களை தங்கள் பக்கம் இழுப்பது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் இம்முறை திமுகவில் ஹவுஸ்புல் போர்டு வைக்கும் அளவிற்கு அதிமுகவில் இருந்து பலரும் படையெடுத்து வருகிறார். இதற்கான பின்னணியில் திமுக என்ன திட்டம் வைத்துள்ளது என்பதை பார்க்கலாம்.
சமீப காலமாக அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைகிறோம் என்று கூறுவோரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே செல்கிறது. ஏனென்றால் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், நிலோஃபர் கஃபீல், முன்னாள் எம்பி அன்வர் ராஜா, கார்த்திக் தொண்டைமான், ஜெயந்தி பத்மநாபன், மருது அழகுராஜ், மைத்ரேயன், பழனியப்பன் என்று பலரும் திமுகவில் ஐக்கியமாகிவிட்டனர்.

முன்னாள் எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் என்று சொல்லி முடியாத அளவிற்கு லிஸ்ட் எகிறி இருக்கிறது. அதிமுகவில் இருந்து வருபவர்களை பல்வேறு கணக்குகளுடன் தான் அறிவாலயம் அரவணைப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் வெற்றிக்கு உதவியவர் செந்தில் பாலாஜி. இதனால் செந்தில் பாலாஜியை தங்கள் பக்கம் திமுக இழுத்து கொண்டது.
இதன் பலனாக கரூர் மாவட்டம் திமுக வசமானது. அதேபோல் டெல்டா மாவட்டத்தில் ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கம் திமுகவுக்கு தனியாளாக மிகப்பெரிய சவால் கொடுத்து வந்தவர். இப்போது வைத்திலிங்கம் திமுக பக்கம் வந்துள்ளதால், ஒரத்தநாடு தொகுதியில் சிக்கல் இருக்காது என்று பார்க்கப்படுகிறது. சிவி சண்முகத்தை கடந்த தேர்தலிலேயே லட்சுமணனை வைத்து திமுக வீழ்த்தியது.
இதனால் சிவி சண்முகம் தொகுதி மாற முடிவு செய்துவிட்டார். அதேபோல் கோவில்பட்டி தொகுதியில் மாணிக்கராஜா, ராமநாதபுரத்தில் அன்வர் ராஜா, ஆலங்குளம் தொகுதியில் மனோஜ் பாண்டியன் ஆகியோரும் அந்தந்த தொகுதியில் வெல்லக் கூடிய முகங்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா விரும்பி போட்டியிட்ட தேனி மாவட்டத்தில் இனி முக்குலத்தோர் சமூக வாக்குகள் திமுகவுக்கு விழப் போகிறது.
அதுமட்டுமல்லாமல் இப்படி திமுகவில் இணையும் பலருக்கும் சுமார் 20 தொகுதிகளை ஒதுக்க அறிவாலயம் திட்டமிட்டுள்ளது. அந்தந்த தொகுதி நிலவரம் பார்த்துவிட்டு தான் இணைப்பு படலம் நடக்கிறது என்கின்றனர். இதன் மூலமாக கடந்த முறை வென்ற தொகுதிகளில் சில கைவிட்டு செல்லும் பட்சத்தில் எளிதாக சரிகட்ட முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் கணக்கு போட்டுள்ளார்.
அதேபோல் அதிமுகவில் இருந்து வருவோரிக் களத்தில் பணியாற்றுவோரை தான் திமுக விரும்புகிறது. மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஓபிஎஸ், கார்த்திக் தொண்டைமான், மருது அழகுராஜ் உள்ளிட்ட அனைவருமே களத்தில் பணியாற்றுபவர்கள். இதன் மூலமாக அதிமுகவை களத்திலும் பலவீனப்படுத்த முடியும் என்று திமுக நம்புகிறது.
எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரம் கடந்து 2021 சட்டசபைத் தேர்தலில் அதிமுக ஓரளவு கவுரமான வெற்றியை பெற்றதற்கு களத்தில் பணியாற்றும் செயல் வீரர்கள் தான் முக்கிய காரணம். ஆனால் இம்முறை எடப்பாடி பழனிசாமி யார் கட்சியை விட்டு சென்றாலும் கண்டு கொள்வதில்லை என்று அதிமுகவினரே புலம்ப தொடங்கி இருக்கின்றனர்.
-
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள் -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
விஜய் கட்சியால் எந்த பாதிப்பும் இல்லை.. திமுகவின் வெற்றி பிரகாசமா இருக்கு.. நேரடியாக சொன்ன சபரீசன்! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!












Click it and Unblock the Notifications