10 ஆண்டுகளுக்கு பின்னர் புத்துணர்வு பெற்ற நமக்கு நாமே திட்டம்.. ரூ.100 கோடி ஒதுக்கியது தமிழக அரசு
சென்னை : ஊரகப் பகுதிகளில் வளர்ச்சிக்காக நமக்கு நாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும். 2011ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது தொடங்கப்பட்ட இந்த திட்டம் தற்போது மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் புத்துணர்வு பெற்றுள்ளது.

ஊரக பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒரு முக்கிய அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஊரகப் பகுதிகளில் அதாவது கிராம ஊராட்சி பகுதிகள், பேரூராட்சி பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நவீன வகுப்பறைகள், ஆய்வகங்கள், சுற்றுச்சுவர் கட்டுதல், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் புதிய கட்டிடங்கள் கட்டுதல் நமக்கு நாமே திட்டத்தில் மேற்கொள்ளப்படும்.
பொது மக்களின் சுய சார்பு தன்மையை ஊக்குவிக்கவும், பலப்படுத்தவும், மக்களுக்கு தேவையான திட்டங்களை அவர்களது பங்களிப்புடன் செயல்படுத்துவதுமே நமக்கு நாமே திட்டத்தின் பிரதான நோக்கமாகும். தமிழகத்தில் நமக்கு நாமே திட்டத்தில் கீழ் 2021-22ம் ஆண்டு நிதியாண்டின் திட்டங்களுக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு ஒதுக்கி உள்ளளதாக ஊரக உள்ளாட்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
2011ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது நமக்கு நாமே திட்டம் செயல்படுத்தப்பட்டது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த திட்டம் மீண்டும் புத்துணர்வு பெற்றுள்ளது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எந்தெந்த பணிகள் செயல்படுத்த வேண்டும், அவை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக ஒரு விரிவான வழிகாட்டு நெறிமுறைகளும் தமிழக அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது.
தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 100 கோடி ரூபாயில், 50 சதவீதத் தொகை இத்திட்டங்கள் செயல்பாட்டிற்கு வருவதற்கான நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டள்ளது. மீதமுள்ள 50 சதவீத தொகையான 50 கோடி ரூபாய் பணிகள் செயல்பட்டு கொண்டிருக்கும் போது ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications