சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

7 தமிழர் விடுதலை.. ஆளுநரின் இரும்பு இதயம் இளக மறுக்கிறது.. டாக்டர் ராமதாஸ் விமர்சனம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைசென்று இருக்கும் 7 தமிழரின் விடுதலையில் ஆளுனரின் இரும்பு இதயம் மட்டும் இளக மறுக்கிறது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைசென்று இருக்கும் 7 தமிழரின் விடுதலையில் தமிழக ஆளுநரின் இரும்பு இதயம் மட்டும் இளக மறுக்கிறது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைசென்று இருக்கும் 7 தமிழரின் விடுதலையில் ஆளுநரின் இரும்பு இதயம் மட்டும் இளக மறுக்கிறது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

TN Governor heart has to get down for Rajeev Gandhi assassination convicts says DR. Ramadoss

இவர்களை விடுதலை செய்வது தொடர்பான நடைமுறைகள் தொடர்ந்து இழுத்துக் கொண்டே செல்கிறது.முதலில் இந்த வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், நளினி உள்ளிட்ட மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின் அந்த தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது. தற்போது ஆயுள்தண்டனை கைதிகளாக இவர்கள் இருக்கிறார்கள்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, விதி எண் 161ன் மூலம் தமிழக அரசே விடுதலைக்கு இவர்களின் பரிந்துரை செய்யலாம். ஆளுநர் அனுமதி அளித்தால் இவர் விடுதலை செய்யலாம். இதற்கு தமிழக அரசு பரிந்துரை செய்தும் இன்னும் இவர்களை ஆளுநர் விடுதலை செய்யாமல் உள்ளார்.

இது பலருக்கும் மனவருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் இவர்கள் விடுதலையில் முடிவு எடுக்காமல் இருப்பது பலருக்கும் கோபத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டிவிட் செய்துள்ளார்.

TN Governor heart has to get down for Rajeev Gandhi assassination convicts says DR. Ramadoss

அதில், 7 தமிழர் விடுதலை தாமதப்படுத்தப்படுவதைக் கண்டித்து வேலூர் சிறையில் முருகனும், அவருக்கு ஆதரவாக நளினியும் உண்ணாநிலை: செய்தி - மற்றொரு பக்கம் பேரறிவாளனின் தாயார் இதே கோரிக்கைக்காக தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டிருக்கிறார். ஆனாலும், ஆளுனரின் இரும்பு இதயம் மட்டும் இளக மறுக்கிறது!, என்றுள்ளார்.

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் இந்த கோரிக்கைக்காக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பேரணி நடத்தி வருகிறார். அதேபோல் வேலூர் சிறையில் விடுதலை செய்யும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்று முருகனும், நளினியும் காலவரையற்ற உண்ணாவிரம் இருந்து வருகிறார்கள்.

English summary
TN Governor heart has to get down for Rajeev Gandhi assassination convicts says PMK founder DR. Ramadoss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X