மருத்துவ படிப்புகளில் சேரும்.. அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக டேப்.. மா.சு கலக்கல் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள 544 அரசுப் பள்ளி மாணவர்கள் பெரிதும் பயன் தரும் வகையில் புதிய திட்டம் ஒன்றைத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே நீட் தேர்வின் மூலமே மருத்துவ படிப்புகள் நிரப்பப்பட்டு வருகிறது இதற்கான தரவரிசை பட்டியலைக் கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த ஜன. 27ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

மருத்துவ கலந்தாய்வு
முதல் நாள் அன்று சிறப்புப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்றும் இன்றும் 7.5% இட ஒதுக்கீடு பெறும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்த 7.5% உள் ஒதுக்கீட்டில் மொத்தம் 544 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ இடங்களைப் பெற்றனர். நாளை ஜன. 30 முதல் பொதுப்பிரிவினருக்குக் கலந்தாய்வு ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது.

அமைச்சர் ஆய்வு
இதனிடையே தமிழ்நாட்டில் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள 544 அரசு பள்ளி மாணவர்கள் டேப் வழங்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று தமிழ்நாட்டில் 20ஆவது மெகா தடுப்பூசி முகம் நடைபெறும் நிலையில், சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் ஊராட்சி ஆரம்பச் சுகாதார மையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

வேக்சின் பணிகள்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேக்சின் செலுத்தும் பணிகள் குறித்து பல்வேறு தரவுகளைப் பகிர்ந்து கொண்டார். தமிழ்நாட்டில் 2669 ஊராட்சிகள், 24 நகராட்சிகளில் 100% பேருக்குக் குறைந்தது ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், வேக்சின் போட்டவர்களுக்குத் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவதில்லை என்பதால் அனைவரும் விரைவாக வேக்சின் போட்டுக் கொள்ள வேண்டும் என்றார்.

இலவசமாக டேப்
தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சு , "புதிய வகை நியோ கோவ் வைரஸ் வவ்வால் மூலம் பரவக் கூடிய வைரசால் பாதிப்பு அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் யாரும் அச்சப்படத் தேவையில்லை. மேலும், 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள 544 அரசுப் பள்ளி மாணவர்கள் டேப் வழங்கத் திட்டம் இருந்தது. இதை அமல்படுத்துவதற்குள் தேர்தல் நடத்தை விதிகள் வந்துவிட்டது. தேர்தலுக்குப் பிறகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு டேப் வழங்குவது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்" என்று கூறினார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications