டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. குரூப் 1 தேர்வு தேதி மாற்றம்..!
சென்னை : அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவிருந்த குரூப் 1 தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பணியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 முதல்நிலைத் தேர்வு அக்.30-ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவிருந்த குரூப் 1 தேர்வு நிர்வாக காரணங்களுக்காக வரும் நவம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதன் மூலம் குரூப் 1 தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்த கூடுதல் கால அவகாசத்தை, தேர்வுக்கு சிறப்பாகத் தயாராவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குரூப் 1 தேர்வு
தமிழகத்தில் குரூப்-1 பணியிடங்களுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திவருகிறது. அதன்படி நடப்பாண்டு 92 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தது.

காலி இடங்கள்
துணை ஆட்சியர் - 18, கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் -13, காவல்துறை துணை கண்காணிப்பாளர் - 26, வணிகவரி உதவி ஆணையர் 25, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் - 7,
மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி - 3 என குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தகுதிகள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக வணிகம் மற்றும் சட்டம் இரண்டிலும் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.
அத்துடன் சமூக அறிவியலில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ படித்தவர்களாகவும் தொழில்துறை அல்லது தனிநபர் மேலாண்மை அல்லது தொழிலாளர் நலனில் அனுபவம், கிராமப்புற சேவையில் முதுகலை பட்டமும் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

விண்ணப்பப் பதிவு
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பதிவு ஆகஸ்ட் 22ஆம் தேதியோடு நிறைவடைந்தது விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அதை சரிசெய்ய ஆகஸ்ட் 27 முதல் 29-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

ஒத்திவைப்பு
இந்நிலையில், அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறவிருந்த குரூப் 1 முதல்நிலைத் தேர்வை ஒத்திவைப்பதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "நிர்வாக காரணங்களுக்காக, வரும் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறவிருந்த குரூப்-1 தேர்வு நவம்பர் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது" என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications