சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள்- சென்னையில் இருந்து டிராபிக்கில் சிக்காமல் வெளியூர் செல்லலாம்

Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் திருநாளை முன்னிட்டு நாளை முதல் ஜனவரி 13-ந் தேதி வரை மொத்தம் 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை: 2022 பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்துத் துறையின் சிறப்பு ஏற்பாடுகள், சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து கடந்த மாதம் 20-ந் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

TNSTC to operate 16,768 special buses for Pongal from tomorrow

இக்கூட்டத்தின் முடிவுகள்படி, அரசு அறிவுறுத்தியுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நாளை முதல் வரும் 13-ந் தேதி வரை மொத்தம் 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,000 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 3 நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,468 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

சென்னை மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள், ஆந்திரா செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து ஈ.சி.ஆர். வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கம்

TNSTC to operate 16,768 special buses for Pongal from tomorrow

சென்னை தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக தஞ்சாவூர், கும்பகோணம் செல்லும் பேருந்துகள் இயக்கம்

தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, செஞ்சி, புதுச்சேரி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னை பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருத்தணி செல்லும் பேருந்துகள் இயக்கம்.

இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

மேலும் முன்பதிவு பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்டு பூவிருந்தவல்லி, வெளி சுற்று சாலை வழியாக வண்டலூர் சென்றடைந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தம் சென்று தாம்பரம், பெருங்களத்தூரில் முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றிக் கொள்ளும்.

கார், இதர வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்லாமல் திருக்கழுக்குன்றனம் செங்கல்பட்டு அல்லது ஶ்ரீபெரும்புதூர்- செங்கல்பட்டு வழியாக செல்ல வேண்டும். இவ்வாறு தமிழக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNSTC to operate 16,768 special buses for Pongal from tomorrow

புதுச்சேரியில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை.. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு புதுச்சேரியில் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு தடையில்லை.. ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு

English summary
TNSTC will operate 16,768 special buses for Pongal from tomorrow (Jan.11).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X