சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கருணாநிதியின் கம்பீர சிலை - எவ்வளவு செலவு? தயாரித்தது யார்? எப்படி? நீங்கள் அறியாத டாப் 10 தகவல்

Google Oneindia Tamil News

சென்னை: அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கம்பீர சிலை எப்படி தயாரிக்கப்பட்டது என்பது குறித்த சுவாரஸ்யமான 10 தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Recommended Video

    Karunanidhi Statue-க்கு பின்னால் இருக்கும் History! #Politics | OneIndia Tamil

    1. இன்று திறக்கப்பட இருக்கும் கருணாநிதியின் முழு உருவ சிலையை வடிவமைத்த சிற்பியின் பெயர் தீனதயாளன். தமிழ்நாட்டில் மட்டுமே 20 க்கும் அதிகமான கருணாநிதியின் சிலைகளை தீனதயாளன் வடிவமைத்து இருக்கிறாராம்.

    2. கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்ட அவரது முழு உருவ சிலையை வடிவமைத்துக் கொடுத்தவர் சிற்பி தீனதயாளன் தானாம்.

    Top 10 interesting facts about Kalaignar Karunanithi 16 feet bronze statue

    3. ஓமந்தூரார் தோட்டத்தில் திறக்கப்படும் சிலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்ட கருணாநிதியின் சிலை வடிவிலேயே வடிவமைத்து இருக்கிறார்கள்.

    4. 16 அடியில் அமைக்கப்படும் இந்த கருணாநிதி சிலை 3 டன் களிமண் மற்றும் மற்றும் 2 டன் வெண்கலத்தால் தயாரிக்கப்பட்டு உள்ளதாம்.

    5. இந்த சிலை போல் ஏற்கனவே 3 டன் களிமண்ணை கொண்ட 16 அடி உயர மாதிரி சிலை வடிவமைக்கப்பட்டு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பார்வைக்கு அனுப்பி வைத்து ஒப்புதல் பெறப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்

    ரூ.1.17 கோடியில் 16 அடி உயர கருணாநிதி கம்பீர சிலை! சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?ரூ.1.17 கோடியில் 16 அடி உயர கருணாநிதி கம்பீர சிலை! சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

    6. முதலமைச்சரின் ஒப்புதலை பெற்ற பிறகு அந்த சிலையை மெழுகில் அச்சிட்டு உண்மையான கருணாநிதி சிலையை வடிவமைத்து இருக்கிறார் சிற்பி தீனதயாளன்.

    7. கருணாநிதியின் இந்த புதிய சிலையே தமிழ்நாட்டில் உலோகத்தினால் அமைக்கப்படும் மிக உயரமான சிலை என கூறப்படுகிறது.

    8. தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையின் செலவில் வடிவமைக்கப்பட்டு உள்ள இந்த கருணாநிதியின் சிலைக்கு ரூ.1.56 கோடி செலவிடப்பட்டு உள்ளார்களாம்.

    9. சென்னை ஓமந்தூரார் தோட்டம் அருகே அண்ணா சாலை சிம்சன் அருகே தந்தை பெரியார் சிலையும், அதற்கு அருகே அண்ணா சாலை சந்திப்பில் பேரறிஞர் அண்ணா சிலையும் உள்ள நிலையில் இரண்டு திராவிட இயக்க தலைவர்கள் சிலைக்கு மத்தியில் கருணாநிதி சிலை திறக்கப்படுகிறது.

    10. இந்த சிலையை சாலைக்கு மத்தியில் வைக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் விருப்பமாக இருந்ததாம். ஆனால், அதிக உயரம் கொண்ட இந்த சிலையால் போக்குவரத்துக்கு பாதிப்பு வரலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியதால் ஓமந்தூரார் வளாகத்தில் வைக்க முடிவு செய்தார்களாம்.

    English summary
    Top 10 interesting facts about Kalaignar Karunanithi 16 feet bronze statue: அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் கம்பீர சிலை எப்படி தயாரிக்கப்பட்டது என்பது குறித்த சுவாரஸ்யமான 10 தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X