முதல் குற்றவாளியே செந்தில் பாலாஜி தான்.. கரூர் மேட்டரில் சிறை செல்வது உறுதி.. ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!
சென்னை: தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் ஆட்சி அமைக்கும் போது கரூர் விவகாரத்தில் செந்தில் பாலாஜி மட்டுமல்லாமல் மொத்த திமுகவும் சிறைக்கு செல்வது உறுதி என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். அதேபோல் ஸ்டாலினை கண்டாலே திருமாவளவன் பயப்படுவதாகவும், தலித் மக்களுக்காக அவர் குரல் கொடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணைக்காக விஜய் ஏற்கனவே ஜனவரி மாதம் 2 நாட்கள் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். தற்போது மார்ச் 15ஆம் தேதி மீண்டும் சிபிஐ விசாரணைக்கு விஜய் செல்ல உள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதன்பின் மார்ச் 17ஆம் தேதி செந்தில் பாலாஜியும் சிபிஐ விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் கரூர் விவகாரம் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் தவெக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பிரச்சனை தொடர்பாக யாருமே பேசுவதில்லை.
விளிம்பு நிலை மக்களுக்காக குரல் கொடுத்த திருமாவளவன் கூட அமைதி காக்கிறார். முதல்வரை கண்டாலே திருமாவளவன் பயப்படுகிறார்.. மக்களின் பிரச்சனைகளையே பேச மாட்டிகிறார்.. 6 தொகுதிகள், 8 தொகுதிகள் முக்கியமா.. விளிம்பு நிலை மக்களின் பிரச்சனையை சரி செய்வது முக்கியமா.. அதனை சொல்லுங்கள்.. நாங்குநேரி, மதுராந்தகத்தில் தலித் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அப்போதும் கூட திருமாவளவன் கோபம் அடையவில்லை.. அதேபோல் விஜய் ஒவ்வொரு மாவட்டமாக பயணித்த போது மக்கள் எழுச்சியை பார்த்து திமுக பயந்துவிட்டது.. உடனே செந்தில் பாலாஜிக்கு அஜெண்டா.. கரூரில் 10 ரூபாய் பாலாஜி என்று விஜய் பேசத் தொடங்கிய போதே செருப்பு வந்துவிட்டது.. எந்த மாவட்டத்திலும் செருப்பு வீசப்படவில்லை. கரூரில் மட்டும் செருப்பு வந்தது எப்படி?
சிபிஐ சம்மன் பற்றி செந்தில் பாலாஜி பேசுகிறார்.. மருத்துவமனை சென்றவர்களில் எனக்கு மட்டும்தான் சம்மன் அளித்துள்ளார்கள் என்று.. ஏனென்றால் செந்தில் பாலாஜி தான் முதல் குற்றவாளி.. அவருக்கு பயம் வந்துவிட்டது.. அன்பில் மகேஷ், முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எல்லோரையும் அழையுங்கள் என்று பயம் வந்துவிட்டது.. அவர் எல்லோரையும் மாட்டிவிட ரெடியாகிவிட்டார்.
தவெக ஆட்சி அமைந்து விஜய் கையில் காவல்துறை வந்த பின், கரூர் விவகாரத்தில் எல்லோரும் ஜெயிலுக்கு போவீர்கள்.. இது நடக்குதா? இல்லையா? என்று மட்டும் பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
Election Exclusive: கால் வச்ச இடமெல்லாம் கன்னிவெடி.. புலம்பித் தள்ளிய விஜய்! திடீரென மாறிய பிரச்சார ப்ளான்! என்னாச்சு? -
தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்.. தவெக வேட்பாளரான ஆர்.எஸ்.முருகன்.. விஜய் சீட் கொடுத்த பின்னணி! -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்! -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
ஆம்புலன்ஸுக்கு வழி விடாதது.. சட்டவிரோதம் என தெரிந்தும் விஜய் செய்த செயல்! பாய்ந்த வழக்கு -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
வேட்பாளரை கூட சரியா பார்த்து நிறுத்த தெரியாத விஜய்! வழக்கு, சர்ச்சைகளில் சிக்கியவர்களுக்கு சீட் -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
என்னது பி டீமா.. ஏ டீம் யாருன்னு தெரியுமா.. ஆவேசமான சீமான்.. விஜயையும் சும்மா விடலையே -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
தன்மான பிரச்சனை.. கோவையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக வேலுமணி மாஸ்டர் பிளான்.. கவுன்டவுன் ஸ்டார்ட்











Click it and Unblock the Notifications